இரண்டு சிக்கிமுக்கிக் கல்-துண்டுகளை ஒன்றுக் கொன்று தட்டினால் தீயுண்டாக்கி விடலாம்.இத்தனை கோடானுகோடி அடிமை ஜந்துக்களுக்கும்இன்று வரை இந்த சாதாரண யுக்தி புலப்படாமல்போனது வியப்புக்குரிய செய்தி யன்றோ? இதுபற்றியே,முற்கால ரிஷிகள் தீயை முதற் கடவுளாகப் போற்றினர்போலும். மனிதனுக்கு இங்ஙனம் கிடைத்த வெற்றியையும்பூமண்டலாதிககத்தையும் அவன் நியாயமான வழியில்உபயோகப்படுத்தவில்லை. குடிகளைப் பட்டினி போட்டுவிட்டு தான் தீர்வை கறந்து வாங்கித் தன் வயிற்றில்அஜீரணமுறப் புதைக்கும் கொடுங்கோலரசனைப்போல்,தன் குடிகளாகிய மிருக பக்ஷிகீடங்களில் பலவற்றைத்தின்று பிழைக்கும் ஈன வழக்கத்தைக்கைக்கொண்டிருக்கிறான். மனிதன் செய்யும்அநியாயங்களில் மாம்ஸ போஜனமே மிகவும் இழிவானஅநியாயமென்று என் புத்திக்கு நிச்சயமாகப் புலப்பட்டிருக்கிறது. மனிதன் செய்யக்கூடிய பாபங்கள் அனைத்திலும்இதுவே மிகக் கொடிய பாபம் என்று என் புத்திக்குஐயந்திரிபற விளங்கியிருக்கிறது. மிருகங்களை நமக்கு ஸகாக்களாக வைத்துக்கொண்டால், அவற்றால் எண்ணிறந்த பயன்கள் எய்தலாம்.அவற்றை நாம் அடிமைகள் ஆக்கிவிட்டோம். ஒரு ராஜாதன் குடிகளை அடிமைகள் போலே நடத்துகிறான்.அவர்களுக்கு நல்ல சோறு கிடைக்காமல் இருக்கும்போதுதீர்வையை உறிஞ்சுகிறான். அவர்களுக்கு ஸ்வதந்திரம்கொடுக்கவில்லை. நாகரீகம் கொடுக்க விரும்பவில்லை.மற்றொரு ராஜா தன் குடிகளைத் தனக்கு ஸமானமானஅந்தஸ்துடையவர்களாக மதிக்கிறான். "கொஞ்சமாகத்தீர்வையை வாங்கிக் கொண்டு, குடிகளுக்கு சோற்றுப்பயமில்லாமலும் பஞ்ச மரணங்கள் இல்லாமலும்காப்பாற்றுகிறான். அவர்களுக்கு எல்லாவித மனுஷ்யஸ்வதந்திரங்களும் ஜீவாதார உரிமைகளும் கொடுத்துமேன்மைப்படுத்துகிறான். கல்வி, காட்சி முதலிய பல்வகைபயிற்சிகளாலும் அவர்களை எல்லா விதங்களிலும்எப்போதும் நாகரீகப்படுத்த விரும்புகிறான். முதற்சொன்ன ராஜாவுக்கு ஏதேனும் ஆபத்துக்காலம் நேரிட்டால், அப்போது அவனுடைய குடிகள் எல்லாவிதத்திலும் பயன்படமாட்டார்கள். அந்த ஆபத்தை ஸகல விதங்களிலும் மிகுதிப்படுத்த முயற்சி செய்வார்கள். இரண்டாவதிற் சொன்ன ராஜா, தன் குடிகளை நடத்தும்நேர்மையினாலேயே மிகவும் பயன் பொருந்தியவனாய்,எவ்வித ஆபத்திற்கும் உட்படாமலே நல் வாழ்வு வாழ்ந்திருப்பான். |