பக்கம் எண் :

சமூகம் - மிருகங்களைச் சீர்திருத்தல்

மனிதனைச் சீர்திருத்த லக்ஷத்தொன்று உபாயங்கள்ஏற்பட்டிருக்கின்றன. மிருகங்களைச் சீர்திருத்த நாம் முயற்சிசெய்யவில்லை.

கோயில், குளம், அரண்மனை, நீதிஸ்தலம், வீடு,மன்று முதலிய எண்ணற்ற விதங்களால் மனிதர் தம்மைத்தாமேசீர்திருத்திக் கொள்ள முயல்கின்றார்கள். பள்ளிக்கூடமேஉபாயம் என்றும் ஸகல மனுஷ்யருக்கும், எழுத்துப் படிப்புச்சொல்லித் தீரவேண்டும் என்றும் ஐரோப்பியக் கல்விநிபுணர்கள் ஸித்தாந்தம் பண்ணுகிறார்கள். இது நிற்கமிருகங்களையோ, முதலாவது தின்கிறோம். ஆடு, மாடு, கோழி,"காடை, கவுதாரி, புறா, குயில், குருவி, வாத்து, பன்றி, மான்முதலிய பல ஜந்துக்களை உயிரோடு வெட்டித் தின்கிறோம்;வேட்டையாடுகிறோம். யானை முதல் முயல் வரை பலஜந்துக்களை, புலி, கரடி, சிங்கங்களை துஷ்டமிருகங்கள்என்றும், ஊரும் பாம்பு தேள் முதலியவைகளை துஷ்டஜந்துக்கள் என்றும் நாம் சொல்லுகிறோம். ஏன்? அவைநம்மைக் கொல்வதனாலே.

எத்தனையோ ஜந்துக்களை நாம் கொல்லுகிறோம்.நமக்கு மிருக பாஷைகளில் என்ன பெயரோ? துஷ்டமனிதன்என்ற பெயரிருக்கலாம். பசுக்களையும் மாடுகளையும் நாம்வதைக்கிறோம். நமக்கு வதைப்பதில் எத்தனைஸ்வதந்திரமோ அவ்வளவு ஸ்வதந்திரம் அவற்றிற்கும் உண்டு.நீ மிருகத்தைவிட அதிக புத்திசாலியென்று நினைத்தால்அதைச் சீர்திருத்து. அப்படியே, சீமையில் சில குரங்குகளைச்சில ஸர்க்கஸ் கம்பெனியார் கால் சட்டை, கோட், தொப்பி,கண்ணாடி, பூட்ஸ் வகையறா மாட்டி, சாராயம் கொடுத்து,ஸிகரெட்டுப் பிடிக்கச் சொல்லி, உடுப்பு மாட்டி, உடுப்புக்கழற்றி, மேஜையிற் தீனி தின்று, அமளிப்படுத்தும்படி கற்றுக்"கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைக் காட்டி காசு வாங்கிமனிதன் பிழைத்திருக்கிறான்.

இரக்கத்தைக் காணோம். அவை பரஸ்பரம் ஹிம்சை இல்லாமல் எல்லாம் எல்லாவற்றின் ஹிதார்த்தமாகவாழ்விக்க உபாயம் உண்டாக்கலாம். நமது முன்னோர் பசுவைமாதா என்று சொல்லி வணங்கினார்கள். நாம் அவர்களை(ஈக்வாலிடி) ஸமத்வம், (லிபர்டி) விடுதலை, (ப்ரெடெர்னிடி),உடன்பிறப்பு தெரியாத மூடர்கள் என்று சொல்லி மேற்படிபசுக்களைக் கறி சமைத்துத் தின்ன இச்சிக்கிறோம். அதன்பாலை ஊட்டி நம்முடைய குழந்தைகளை வளர்த்தோம்.ஏன்? நினைப்பில்லாமல்.