பக்கம் எண் :

சமூகம் - மிருகங்களைச் சீர்திருத்தல்

போடா!

வெள்ளைக்காரன் சொன்னான்; ''யோக்கியதை உத்தமமார்க்கம்''; நியாயமான வார்த்தை.

மாட்டை நாம் தாய் போலவே நினைப்பதுயோக்யதையா? கறி சமைத்துத் தின்பது யோக்யதையா?குயில் பாடுகிறது. கந்தருவர் கேட்டுத் தலை அசைக்கிறார்கள்.நீ ஏன் அம்பு போட்டு அதைக் கொல்லுகிறாய்?

மிருங்களுக்குப் பள்ளிக்கூடம் போட்டுஅவற்றிற்கு நல்ல வழி காண்பித்து அவற்றைச்சீர்திருத்துதல் மிகவும் அவசியம். ஆனால் 'ஹிந்துக்கள் அத்தனை பேருக்குமே இன்னும்பள்ளிக்கூடம் போடவில்லையே? ஹிந்துக்களில்"நூற்றுக்குப் பதினொருவர் மாத்திரமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்று கேள்விப்பட்டஞாபகமிருக்கிறதே. அப்படியிருக்க, அதற்கு முன்பு,மிருகங்களுக்குப் பள்ளிக் கூடம் போட முற்படலாமோ''என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம். அங்ஙனம் கூறலாகாது.

ஏனென்றால், நம்முடைய கடமையை நாம் செய்யவேண்டும். நாம் கூடுமானால், ஹிந்துக்களுக்கும் பள்ளிக்கூடம் போடுவோம். அவர்கள் சரிப்பட்டு வரவில்லையானால்மிருகங்களுக்குப் பள்ளிக்கூடம் போட்டு அவைகளைச்சீர்திருத்தும்போது, அதை ஹிந்துக்களும் மற்ற ஜாதியாரும்கண்டு பயனடையக் கூடும்.

தன்னைத்தானே திருத்திக்கொள்ளாதவன் பிறஜந்துக்களைத் திருத்த அதிகாரம் பெற மாட்டான். தன்னைத்தானே திருத்திக் கொள்வதே பிரதானம். தன்னைத் திருத்திஅமரனாகச் செய்துகொள்க. அதுவே ஒருவன் செய்யவேண்டிய தலைமைத் தொழில்.