பக்கம் எண் :

சமூகம் - மிருகங்களும் பக்ஷிகளும்

      ''கொல்லா விரதம் குவலய மெல்லாமோங்கி       எல்லார்க்கும் சொல்வதென் இச்சை பராபரமே''                                          - தாயுமானவர்.

லௌகிக விஷயங்களில் மஹா நிபுணரும், சிறந்த"வேதாந்தப் பயிற்சியுடையவருமாகிய என் நண்பரொருவர்(அவருக்கு 'கோபால பிள்ளை' என்ற புனை பெயர்சூட்டுகிறேன்) இன்று பகல் நேரத்தில் என்னிடம் வந்துசம்பாஷணை செய்து கொண்டிருந்தார்.

அவர் என்னிடம் சொன்னார்:- 'நீங்கள் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில், எந்தவகுப்பினருக்கும் மனவருத்தம் நேரிடாதபடியாகஎழுதுவதே நன்று. 'இன்சொலால் அன்றி இரு நீர்வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே.' பிறருக்குக் கோபம் ஏற்படாத வகையில் எவ்வளவோ எழுதஇடமிருக்கிறது. உலகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்பதும்,உலகத்தாருக்கு உங்களால் இயன்றவரை நன்மை செய்யவேண்டுமென்பதுமே, நீங்கள் பத்திரிக்கைக்கு வியாசங்கள்எழுதுவதின் நோக்கம். அந்த நோக்கம் விரைவில்நிறைவேற வேண்டுமானால், நம்முடைய கொள்கைகளைச்"சிறிதேனும் கோபமில்லாமலும், ஆத்திரப்படாமலும், பிறர்யாவரேயாயினும் அவர் மனம் சிறிதேனும் நோவாமலும்,முற்றிலும் இன் சொற்களால் எழுதுவதே சிறந்த வழியாகும்' என்றார்.

இது கேட்டு நான்:- 'மிகவும் நன்றாகச்சொன்னீர்கள். இதுவே என் சொந்த அபிப்பிராயமும்.ஆனாலும், ஸ்திரீகளின் நிலைமை, கீழ்ச் சாதியாரின்நிலைமை, ஏழைகளின் நிலைமை, மிருக பக்ஷிகளின்நிலைமை-இவற்றைக் குறித்து எழுதும்போது, மேற்படிமாதர் முதலான எளிய வகுப்பினருக்குச் சிறிதேனும்ஈரம் இரக்கமின்றிக் கொடுமைகள் செய்யும் மக்களின் மீதுசில சமயங்களில் என்னையும் மீறி எனக்குக் கோபம்பிறந்துவிடுகிறது. ஆனால், இந்தக் கோபத்தையும் கூடியசீக்கிரத்தில் முயற்சி பண்ணி அடக்கி விடுகிறேன். நீங்கள்சொன்ன விதியையே எப்போதும் பரிபூரணமாகஅனுஷ்டிக்க முயலுகின்றேன். ஏனென்றால், கோபச்சொற்கள் நமது நோக்கத்தின் நிறைவேறுதலுக்கே, நீங்கள்குறிப்பிட்டவாறு, தடையாகி முறிகின்றன. ஆடு மாடுதின்போரை நாம் வாய்க்கு வந்தபடி வைதால், அதனின்றும்அவர்களுக்கு நம்மீது கோபம் அதிகப்படுமே யொழிய,அவர்கள் மாம்ஸ பக்ஷணத்தை நிறுத்த வழியுண்டாகாது.தக்க நியாயங்கள் காட்டுவதும் அவர்களுடையகாருண்யத்தை நாம் கெஞ்சுவதுமே மனிதர் நாம் சொல்லும்கக்ஷியை அங்கீகரிக்கும்படி செய்யும் உபாயங்களாம்' என்றேன்.