அப்போது என் நண்பர்:- ''மிருகங்களைக்கொன்று தின்னும் அநியாயத்தை நினைக்கும்போது,எனக்கும் அடக்கமுடியாத வயிற்றெரிச்சல் உண்டாகத்தான்செய்கிறது. அவற்றை வெட்டும்போது, நீங்கள் நேரில்பார்த்திருக்கிறீர்களா?ஆட்டை வெட்டப்போகும் ஸமயத்தில்,அது தலையை அங்குமிங்கும் அசைத்து விட்டால்வெட்டுசரியாக விழாதென்பதை உத்தேசித்து, அதன்வாய்க்கெதிரே பச்சைக் குழையைக் காட்டுகின்றார்கள். அதுகுழையைத் தின்பதற்காக முகத்தை நேரே நீட்டும்சமயத்தில் திடீரென்று ஒரே வெட்டு வெட்டி அதன்தலையைத் துண்டித்து விடுகிறார்கள். அங்ஙனம் வெட்டும்போது பார்த்தால் வெட்டுவோனிடம் நமக்கு மிகுந்த"குரோதம் உண்டாகத் தான் செய்கிறது. அவனை க்ஷமிப்பதுகஷ்டமாகத் தான் இருக்கிறது. இத்தனை சுலபமாக ஒருஆட்டை வெட்டிக் கொன்று தீர்த்துவிடுகிறார்கள். ஒருஆட்டிற்கு உயிர் அளிக்க இவர்களால் முடியுமா? 'சில தினங்களுக்கு முன்பு, சங்கரநயினார்கோயிலுக்கருகே ஒரு கிராமத்திற்குப் போயிருந்தேன்.அங்கே ஒரு மாடன் கோயிலில் பெரிய ஜனத்திரள் கூடிபூஜை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த மாடசாமியார் தெரியுமா? அந்த கிராமத்தில் பல வருஷங்களின்முன்னே ஒரு மறவன் இருந்தானாம். அவன் கொலை,களவு முதலிய செயல்களில் மிகுந்த வீரனாகவும் ஏழைஎளியோர் மீது மாத்திரம் கிருபையுடையவனாகவும்இருந்தானாம். அவன் செத்த பின், அவனை அந்தஇடத்தில் ஸமாதி வைத்து, அந்த ஸமாதியில் ஓர்கோயில் கட்டி அந்த மறவனையே மாடசாமியாகச்செய்து, அந்தப் பக்கத்துக் கிராமத்தார் கும்பிட்டுவருகிறார்கள். அந்தக் கோயிலில் வேடிக்கை பார்க்கும்பொருட்டாக நான் சில சிநேகிதர்களுடன் போயிருந்தேன்அங்கே இருநூறு, முந்நூறு கழு மரங்கள் நாட்டிஅவற்றில் ஆடுகளைக் கோத்து வைத்திருக்கிறார்கள்.அந்த ஆடுகள் கழு மரங்களில் குற்றுயிராகத் துடித்துக்கொண்டிருக்கையிலே நான் பார்க்கவில்லை. அப்போதுபார்த்தால் என் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ,அறியேன். அவை செத்துப் போய் இரத்தமும் நிணமும்ஒழுகிக் கொண்டிருக்கையிலே நான் பார்த்தேன். அந்தக்காட்சியை நினைக்கும் போது, இப்போதும் என்உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. ஆஹா! என்னகொடும்பாவம்! என்ன மஹாபாதகம்!' என்று கூறி, என் நண்பராகிய கோபால பிள்ளை மிகவும்பரிதாபப்பட்டார். |