பக்கம் எண் :

சமூகம் - மிருகங்களும் பக்ஷிகளும்

அப்போது நான் சொன்னேன்:- ''சிலதினங்களின் முன்பு பாரஸீகத்தின் பொம்மை ராஜாவாகியஷா சக்கரவர்த்தி பாக்தாது நகரத்திற்குத் திரும்பிவந்தாராம். அதாவது, அவர் ஐரோப்பாவில் சுற்றுப்பிரயாணம் பண்ணி விட்டுத் தம் தேசத்திற்கு வருகையிலேபாக்தாது நகரத்திற்கு விஜயம் பண்ணினாராம். அப்போது,அவருடைய வரவை அலங்கரிக்கும் பொருட்டாகபாக்தாது நகரத்தில் 80 ஆடோ 100 ஆடோவெட்டப்பட்டதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் தந்திசமாசாரம் வந்திருந்தது. அதைப் படித்தபோது என்வயிற்றில் நெருப்புப் பந்தம் விழுந்தது போலிருந்தது.ஆனால், நமது தேசத்து சில்லரைத் தெய்வங்களின்"கோயில்களிலே பூஜைதோறும், சில இடங்களில் 1,000ஆடு 10,000 ஆடு வீதம்கூட வெட்டப்படுவதைநினைக்கும்போது எனக்கு அடக்க முடியாதகோபமுண்டாகிறது.

'திருநெல்வேலிக்கருகே ''குரங்கிணி யம்மன்''கோயில் என்று ஒரு கோயில் இருக்கிறது. அங்குவருஷோத்ஸவ காலங்களில் கணக்கில்லாத ஆடுகள்வெட்டப்படும் என்று கேள்விப்படுகிறேன்.

'இதே மாதிரி சென்னைப் பட்டணத்திற்கருகேஒரு கிராமத்தில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது.இன்னும் நாடு முழுமையிலும் இம்மாதிரியான கோயில்கள்எத்தனையோ இருக்கின்றன. இவற்றில் நடக்கும்கொலைகளைத் தடுக்கும்படி அந்தக் கோயில்தர்மகர்த்தாக்களையும் பொது ஜனத் தலைவர்களையும்காலில் விழுந்து கேட்டுக்கொள்வதாகப் பத்திரிகைக்குஎழுதப் போகிறேன். ''கோபச்சொற்கள் சொல்வதிலும்வைவதிலும் கார்யம் இல்லை'' என்று நீங்கள்சொல்லுகிறீர்களே, நாம் என்ன செய்வோம்?' என்றேன்.

இங்ஙனம் நெடுநேரம் ஜீவநாசத்தின்அநியாயத்தையும் அதனால் மனிதருக்குண்டாகும்எண்ணற்ற பாவங்களையும் அவற்றால் உண்டாகும் நோய்சாவுகளையும் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அந்தசம்பாஷணை முழுவதையும் இங்கு எழுத இடமில்லை.எனினும், நான் கோபால பிள்ளையிடம் வாக்குக்கொடுத்தபடியே இங்கு வேண்டுதல் செய்கிறேன்.'தமிழ் நாட்டு ஜனத்தலைவர்களே, உங்கள் காலில் வீழ்ந்துகோடிதரம் நமஸ்காரம் செய்கிறேன். மாம்ஸ பக்ஷணத்தைநிறுத்துவதற்கு வழி செய்யுங்கள்.'