பக்கம் எண் :

சமூகம் - ஏன்?

குழு

''குழு'' என்ற பழைய தமிழ்ச் சொல்லுக்குக்''கூட்டம்'' என்று அர்த்தம். இப்போது மஹாஸபை என்றுசொல்வதைப் பழைய தமிழர் குழு என்றனர். தமிழரசர்காலத்தில் ஐந்து குழுக்கள் உண்டு:  (1) குடிகள் குழு, (2) குருக்கள் குழு, (3) ஜோதிடர் குழு, (4) வைத்தியர்குழு, (5) மந்திரிகள் குழு.

ராஜா செய்யும் விதிகள் இந்த ஐந்து குழுக்களின் அனுமதி பெற்ற பிறகுதான் உறுதிப்படும். "குடிகளின் குழுவிலே ஜனங்களின் பிரதிநிதிகள் இருந்தனர்.குருக்கள் ஸபையிலே மதத் தலைவரும், சோதிடர்ஸபையிலே கணிதக்காரரும் இருந்து அரசியலானதுசாஸ்திரக் கருத்தையும், ஜனாசாரங்களையும் தழுவிநடக்கும்படி ஆலோசனை சொல்லினர். வைத்தியர் குழு,நாட்டிலே நோய்கள் பரவாதபடி அரசன் செய்ய வேண்டிய சுத்தி முறைகளைக் கவனிப்பது. மந்திரிகளின்குழு அரசியலின் மூல தர்மங்களிலே தவறு நேரிடாமல்அரசனை நியாய வழியில் நடத்துவது. இந்தவிஷயமெல்லாம் நமது நாட்டுப் பழைய சாஸனங்களைஆராய்ச்சி செய்யும் புராதன பரிசோதனைப் பண்டிதர்கள்கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். மணிமேகலை முதலிய பழைய நூல்களிலும் காணலாம். இது நிற்க.ஜனங்களுடைய ஸம்மதப்படி ஆட்சி செய்ய வேண்டும்என்ற கருத்துடன் ஏற்படும் சபைகள் இங்கிலாந்து முதலியதேசங்களில் நாளுக்கு நாள் நாகரீகமும் சீர்திருத்தமும்பெற்று மேன்மேலும் அதிக வலிமையுடன் ஏறி வந்திருப்பதாகச் சரித்திரங்களிலே தெரிகிறது. நமது நாட்டில்இவை விருத்தியடையவில்லை. ஏன்! எதனாலே?