பக்கம் எண் :

சமூகம் - ஓநாயும் வீட்டுநாயும்

ஓநாய்:-  ஐயா, உம்முடைய " அந்தஸ்தென்ன?  நீ வஸிக்கும் இடம் எங்கே?இக்காட்டிற்கு வந்த காரணமென்ன?  உமக்குஇவ்வளவு சுகமான வாழ்க்கை எங்ஙனம் ஏற்பட்டது?

வீடு நாய்:-  நாம் உக்கிரசேன பாண்டியனிடத்தில் இருக்கிறோம். அவர் நமக்குராஜோபசாரஞ் செய்து வருகிறார். நமக்கும்அவரிடத்தில் பக்தியுண்டு. நம்மை அவர்மற்றெந்த நாய்களைக் காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.

ஓநாய்:-  அண்ணா, என் வாழ்க்கையும்ஒரு வாழ்க்கையா?  காற்றிலும் மழையிலும்,வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரைதேடவேண்டியிருக்கிறது. பசியின் கொடுமையைச்சகிக்க முடியாததாய் இருக்கிறது.

வீட்டு நாய்:-  தம்பி, உன்னுடையஊழ்வினைப் பயனை நீயே அனுபவித்துத் தீரவேண்டும். பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியத்தின்பலனாய் நமக்கு இப்போது இந்தப் பதவி கிடைத்தது.

ஓநாய்:-  நாயாரே, நானும் உக்கிரசேனனுடைய நட்பை நாடி வரலாமா? சுகதுக்கங்களே ஸமரஸமாய் இருந்தால் மாத்திரமேஇவ்வுலக வாழ்வு சகிக்கத்தக்கது. என்னுடையகஷ்டகாலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.

வீட்டு நாய்:-  நல்லதப்பா, என் கூட வா.

இருவரும் சம்பாஷித்துக் கொண்டே வழிநடந்தார்கள். திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுசயம் தோன்றிற்று. பகதூரின் கழுத்தைச் சுற்றி அகலமானதழும்பு இருந்தது. ஓநாய் அதைப் பார்த்தவுடன் ஒருகேள்வி கேட்டது.

ஓநாய்:-  பகதூர், உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

பகதூர் (வீட்டு நாய்):-  ஓ, அது ஒன்றுமில்லை எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டைபோட்டிருந்தது. அதன் தடம் தெரியலாம்.

ஓநாய்:-  அந்தப் பொன் பதக்கம் எங்கே?நீர் ஏன் அதைப் போட்டுக்கொண்டு வரவில்லை?

பகதூர்:-  என்னை வெள்ளிச் சங்கிலியால்கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.

ஓநாய்:-  உம்மை ஏன் கட்டவேண்டும்,யார் கட்டுகிறார்கள்?