பக்கம் எண் :

உண்மை - உயிரின் ஒலி

சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் ஸ்ரீ ஜகதீசசந்திரவஸு, தமது ''வஸு மந்திரம்'' என்ற கூடத்தைப்பாரதமாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில், ''உயிரின் ஒலி''என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார்.

அவருடைய கொள்கை எப்படியென்றால்:- நாம்ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர்நிறைந்திருக்கிறது. ஐந்துக்களைப் போலவே விருக்ஷாதிகளுக்கும்உணர்ச்சியிருக்கிறது. ஆகவே, மண், செடி, ஐந்து, மனுஷ்யன்அத்தனைக்குள்ளும் ஒரே விதமான ப்ராணசக்தியிருக்கிறது. 'இந்தஉலகமே உயிர்க்கடல்ய என்பது அவரது சித்தாந்தம். அவர் பலநுட்பமான கருவிகள் செய்திருக்கிறார். ஹிந்து தேசத்துத்தொழிலாளிகளைக் கொண்டு அந்த ஸூக்ஷ்மக் கருவிகளைஎல்லாம் செய்து கொண்டார். அந்தக்கருவிகளின் நேர்த்தியைப்பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் யந்திரிகளும்"ஆச்சரியப்படுகிறார்கள். அந்தக் கருவிகளின் உதவியால், ஒருபூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிறார். ஒருபுகைபட்ட கண்ணாடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது;அதாவது,கோடுகள் கீறுகிறது. அந்தக் கோடுகளினால் மேற்படி செடியின்உள்ள நிலையை, அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது.

செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சைபோடுகிறது.மறுபடி, தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது. மதுபானம்செய்வித்தால் உண்டாட்டுக் கேளிகள் நடத்துகிறது. செடியின்சந்தோஷம், சோர்வு, வளர்ச்சி, சாவு ஆகிய எல்லாநிலைமைகளையும் கண்ணாடியிலே கீறிக் காட்டுவதைப்பார்க்கும்போது ''செடியின் நாடியுணர்ச்சிகளுக்கும் இதரமனுஷ்யமிருகாதி ஐந்துக்களின் நாடியுணர்ச்சிகளுக்கும் பேதமில்லை''என்பது ருஜுவாகிறது.

இவ்விதமான அற்புதப் பரீக்ஷைகளினால் உலகத்தின்உயிரொலியை நமக்குத் தெரியும்படி செய்த மஹானாகிய மேற்படிஜகதீச சந்திரவஸு நம்முடைய ஹிந்து மதத்தில் ஆழ்ந்தபக்தியுடையவர் என்பது சொல்லாமலே விளங்கும். ஹிந்துக்களின்மேன்மையைப்பற்றி அவர் வார்த்தை சொல்லும்போது, அந்தவார்த்தைகளிலே மிகச்சிறந்ததொரு ஜீவநாதம் உண்டாகிறது. அந்தவார்த்தைகளைப் படிக்கும்போதே படிப்போரின் ஜீவசக்திமிகுதிப்படுகிறது.

அவர் சொல்லுகிறார்:- 'ஸாதாரணக் கருவிகளால்மஹத்தான காரியங்களை நிறைவேற்றிய மஹான்களின்ஸந்ததியிலேநாம் பிறந்திருக்கிறோம். ஒருவன் ஒரு பெருங்காரியத்தில் முழுதும்தன்னை ஈடுபடுத்தினால், அடைத்திருந்த கதவுகள் திறக்கும்.அஸாத்யமாகத் தோன்றுவது அவனுக்கு ஸாத்யமாகும்; உண்மை"தேடுவதையே தொழிலாகக் கொண்ட ஒருவன் சிற்றின்பங்களைவிரும்பலாகாது. லாப நஷ்டங்களையும் வெற்றி தோல்விகளையும்ஒன்று போலக் கருதி அவன் தனது ஜீவனை உண்மைக்குநைவேத்யமாக விடவேண்டும். பாரததேசம் இப்போது வென்றுகாப்பாற்ற வேண்டிய வஸ்து யாது?  சிறியதும் வரம்புற்றதுமாகியஒரு பொருளினால் பாரதமாதா திருப்தியடைவாளா?  இவளுடையஅற்புதமான பூர்வ சரித்திரத்தையும் பூர்வ சாஸ்திரங்களையும்செயல்களையும் யோசிக்கும்போது, தாழ்ந்த தரமுள்ளது சிலநாள்நிற்கிறதுமான பாலமொன்றை இவள் விரும்பமாட்டாளென்பதுதெரியும்.

'இப்போது நம்முடைய கண்முன்னே இரண்டு விதமானதர்மங்கள் காணப்படுகின்றன.