பக்கம் எண் :

உண்மை - பாரத ஜாதி

பாரதம், பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன்துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரிமுனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்றுசேர்த்துஅதன்மிசை முதலாவது சக்ராதிபத்யம் ஏற்படுத்தியபடியால்,இந்த நாட்டிற்கு 'பாரத தேசம்' என்று பெயர் உண்டாயிற்று.கங்கையிலே  வந்து  சேரும்  வாய்க்கால்களெல்லம் கங்கையாகவே  மாறிவிடும்.  பாரத  தேசத்தில்  வந்துகுடியேறித்  தலைமுறை  தலைமுறையாக  இங்குவாழ்பவர்களெல்லாம்  நமது  ஜனக்  கூட்டத்தைச்சேர்ந்தவராகின்றனர்.

கிருஸ்தவர்களாயினும், பார்ஸிகளாயினும்,"மகம்மதியராயினும், இங்கிருந்து வந்து எந்த இஷ்டதெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், பாரத பூமியிலேபிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களையெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும்.இது ஒரே ஜாதி பிரிக்க முடியாதது; அழிவில்லாதது.இதற்குஆதாரமும் மூலபலமுமாவது யாதெனில், ஆர்ய ஸம்பத்து.அதாவது ஆரியரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்.