பக்கம் எண் :

உண்மை - புனர்ஜன்மம் (1)

புனர் ஜன்மம் உண்டு.

மதுரையிலே ஒரு சாஸ்திரியார் நேற்று மாலை இறந்துபோனதாக வைத்துக் கொள்ளுவோம். அவர் திரும்பவும்பிறப்பாரா ?தெரு வழியாக ஒருவன் நடந்து போகும்போது காலிலேஒரு சிற்றெறும்பு மிதிபட்டு இறந்து போவதாக வைத்துக்கொள்ளுவோம். அது திரும்பவும் பிறக்குமா?  இதையெல்லாம்பற்றிச் சாஸ்திரங்கள் மிகவும் விஸ்தாரமாகப் பேசியிருக்கின்றன.அவற்றிலே படித்துக்கொள்ளலாம். ஆனால், நான் இப்போது சொல்லவந்த கதை இதுவன்று. நான் சொல்ல வந்த விஷயம்ஹிந்துஸ்தானத்தின் புனர்ஜன்மம்.

'ஹிந்து ஸ்தானம்' என்பது ஹிந்துக்களின் ஸ்தானம். இதுநமது தேசத்திற்கும், தேசத்திலுள்ள ஜனக் கூட்டத்திற்கும் பெயர்.இந்த ஜனக்கூட்டத்திற்கு 'பாரத ஜாதி' என்று பெயர்
சொல்வதுண்டு.