பக்கம் எண் :

ஓம் சக்தி - கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்

ஒரு கொள்கை என்பதென்ன?  இதைநாம் ஆராய்ந்து அறிவது அவசியம். ஏனெனில், கொள்கையின்றிக் காரியங்களைச் செய்து திரியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். பகுத்தறியும் சக்தி இல்லாதஎவனுக்கும் கொள்கையென்று ஒன்று இருக்காது. ஒரு கொள்கையை யுடையவன் பகுத்தறியும் சக்தி உடையவனாகவே இருக்கவேண்டும். ஆனால், அவ்வறிவின் துணையால் ஒரு கொள்கையை ஒப்புக்கொண்டு அதன்சாயலாகவே தன் கருமங்களைச் செய்து வருபவனல்ல.எத்தனையோ ஜீவப்பிரேதங்கள், ஜீவியத்தின் நோக்கம்இன்னதென்றே அறியாமல், கேவலம் இந்திரிய பாதைகளைக்கழித்துக்கொண்டு, உண்டு உடுத்தி, வாழ்ந்து இறந்து போகின்றனர்.அவர்களெல்லாம் ஏதோ நல்லதோ கெட்டதோ கொள்கைகளைக்கடைப்பிடித்துக் கருமங்களை அவரவற்றிற்குரியபடி செய்துஜீவிக்கும் மனிதர்களல்ல. ஆகையால் கொள்கை யென்பதென்ன?

ஒரு கொள்கையாவது, 'பகுத்தறிவின் துணையால்செய்யத்தக்கது இது, செய்யத்தகாதது இது' என்று ஒருவன்அறிந்து முன் பின் யோசித்துத் தன் வாழ்நாளில் நீடித்துச் செய்ய மனத்தால் ஒப்புக்கொள்ளும் கருமத்தொடரின் அஸ்திவாரமாகிய ஒரு கருத்தாம். நம்நாட்டில் இவ்வாறு கொள்கைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் சக்தி வாய்ந்தமனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் கொள்கைகளைஅவாவோடு மனத்தால் கிரகித்தல் வேறு, அவற்றின்படி நடத்தல் வேறு. யாதேனும் ஒரு கொள்கையை ஒருவன் அங்கீகரித்துக் கொண்டு அதன்படி நடக்க முடியாதவனாய்இருந்தால், அவனும் ஜீவப் பிரேதந்தான்.

இதிலிருந்து, 'கொள்கையற்ற மானிடப் பதர்கள்,கொள்கையிருந்தும் அதன்படி நடக்கவியலாத மானிடப் பதர்கள்'என்ற இரண்டு ஜாதிகள் உண்டென்று ஏற்படுகிறது. இவ்விரண்டுவகுப்பாரால் ஜன சமூகத்திற்கு அவ்வளவு கெடுதல் நேரிடாது.அவர்கள் இருக்கும் வரை சோற்றுகுக் கேடாகவும் நிலத்திற்குப்பளுவாகவும் இருந்து போவார்கள்.

ஆனால், தாங்கள் வசிக்கும் நாட்டிற்குக் குடலைத்தின்னும் அரிபூச்சுகள் போல ஒரு வகுப்பார் தலையெடுததிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலை நிறைய திவ்வியமானகொள்கைகளை அடைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அக் கொள்கைகளை விற்றும் ஜீவிக்கிறார்கள். பொது பீடங்களினின்றும் உலகறிய அவற்றை ஸாங்கோபாங்கமாகப்போதிக்கிறார்கள். பொது ஜனங்கள் அக் கொள்கைகளைக் கேட்டுப் 'இவ்வரிய கருத்துக்களுக்கு ஆலயமாகவிருக்கும் இவர்கள் "பூஜிதையையும் ஏற்றுக்கொண்டு வெறியடைகிறார்கள்.ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் வீட்டிற்குச்செல்வோமானால், அங்கே எலும்பும் தோலும் குப்பையும்சகலவிதமான அழுக்குகளும் நிறைந்து கிடக்கின்றன. இம்மஹான்களின் செய்கைகள் அவர் கொண்ட கொள்கைகளுக்குமுற்றிலும் விரோதமாய் இருக்கின்றன. 'தட்டிச் சொல்ல ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்' என்றபடி பேசிவிட்டு,ஆபத்து வந்த காலத்தில் 'நான் சொன்னபடி நீங்கள் செய்யவேண்டும். நான் செய்கிறபடி நீங்கள் செய்யப்படாது' என்றுஜனங்களை ஏமாற்றுகிறார்கள். அதிலும் கேடாய், தங்களுடையகொள்கைகளை ஜால வித்தைக்காரன் போல் மாற்றிவிடுகிறார்கள்.