சொல் ஒலிவடிவாயிருத்தலையும், ஒலி என்னும் சொற்குச் சொல் என்னும் பொருளும், ஓதை யென்னும் சொற்கு எழுத்தோசையென்னும் பொருளும் உண்மையையும் நோக்குக. ஒலி, ஓசை என்னும் இரு சொற்களும் ஓகார அடிப்படையிற் பிறந்திருப்பினும் ஒலி என்பது எழுத்தொலி போன்ற மெல்லோசை யையும் ஓசை என்பது இடியோசையும் கடலிரைச்சலும் போன்ற வல்லோசையையும் குறிக்கும் வழக்காற்றை அறிதல் வேண்டும். கொல் என்னும் ஒலிக்குறிப்பு கல், கல, கலி எனத் திரிதல் போன்றே, சொல்லென்னும் ஒலியும் சல், சல, சள எனப் பலவாறாகத் திரியும். சொல்லுதல் என்னும் வினை பேசுதல் அல்லது உரைத்தல் என்னும் சிறப்புப் பொருளில் வழங்கிய பின், அதன் அடிப்படையான ஒலிப்புப் சொல்லுதல்’, ‘பல்லி சொல்லிற்குப் பயன்’ என்னும் வழக்குண்மையை நோக்கித் தெளிக. முதற் பகுதி முற்றும் |