(கம்பரா. ஊர்தேடு. 230). 5. கிளைதறித்தல். 6. வெட்டுதல். “தாளும் தோளும் அரக்கி” (விநாயகபு. 42 4). 7. குறைத்தல். “காரரக்கும் கடல்” (தேவா. 46 8). 8. முழுதுமுண்ணுதல். அரக்கு - அரக்கன் = அழிப்பவன். அரப்பு = அழுக்குத் தேய்க்கும் கட்டி அல்லது தூள். அரம்பு = குறும்பு. அரம்பன் = குறும்பன். அரமகள் = வருத்தும் பெண்தெய்வம், தேவமகள். ஒ. நோ : அணங்கு = வருத்தும் பெண்தெய்வம், தேவமகள். அரம்பையர் = தேவமகளிர். “அரம்பையர்ச் சேருவ ரன்றே” (நைடத. நிலா. 13) அரளுதல் = அஞ்சுதல். அரள் - அரட்டு - அரட்டன் = துன்புறுத்துவோன், துன்புறுத்தும் குறுநில மன்னன். அரட்டமுக்கி = துன்புறுத்தும் குறுநில மன்னனை அடக்கும் செங்கோலரசன். அரற்றுதல் = துன்பத்திற் கதறுதல். அர் - அரி. அரிதல் = பொடியாய் நறுக்குதல் அல்லது சிறிய பொருளை அறுத்தல். அரிதாள் = கதிரறுத்த நெல்தாள். அரிவி - இருவி = அரிதாள். அரிவாள் - சிறிதாய் அறுக்கும் வாள்வகை. அரிவாள்மணை = அரிவாள் பதித்த பலகை அல்லது கட்டை. அரிவாள்முனைப் பூண்டு - அரிவாள் முனையிலுள்ள தேங்காய் திருகிபோன்ற இலையுள்ள பூண்டு. அரித்தல் = 1. அரித்தொழுகுதல். 2. சிறிது சிறிதாய்க் கறையான் (சிதல்) போல் அறுத்தல். 3. தினவெடுத்தல், புல்லரித்தல், நுண்ணியதாய் வலித்தல். 4. வெட்டுதல். 5. அழித்தல். கோடரி = கிளையை வெட்டும் வாள். Skt. kuthara, கோடரி - கோடாரி - கோடாலி. அரி, அரிமா = பிறவுயிரினங்களை அழிக்கும் விலங்கு. |