பக்கம் எண் :

25

(வினை) = 1. மனம் பொருந்து. 2. நட்புச் செய். இணங்கு - இணங்கல் = உடன்பாடு. 2. இரண்டு. இணங்கற் பிஞ்சு (உ.வ.)

இணங்கன் = நண்பன்.

“வணங்குவோ ரிணங்கன் வந்தான்” (திருவாலவா. 28 : 27)

இணங்கி = தோழி. (பிங்.)

இணங்கர் = ஒப்பு.

“கற்பிற் கிணங்க ரின்மையான்”     (கம்பரா. மீட்சி. 147)

இணங்கலர் = பகைவர். இணங்கார் = பகைவர்.

இணங்கு (செ. குன்றியவி.) - இணக்கு (செ. குன்றாவி.) = இசைவி.

(பெ.) = 1. இசைவு. “இணக்குறுமென் னேழைமைதான்” (தாயு. பராபர. 273). 2. ஒப்பு. “இணக்கி லாததோ ரின்பமே” (திருவாச. 30 1). இணக்குப் பார்வை = பார்வை விலங்கு.

இணக்கு - இணக்கம் = 1. இசைப்பு. 2. பொருத்தம். 3. நட்பு. “நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்” (கொன்றைவே.). 4. உடன்பாடு. 5. திருத்தம்.

இணக்கோலை = உடன்படிக்கை முறி.

இணாப்புதல் = ஏய்த்தல் (யாழ்).

இணாப்பு = ஏய்ப்பு (யாழ்).

ஏய்த்தலாவது பொருந்தச் சொல்லி ஏமாற்றுதல்.

இணைதல். (செ. குன்றியவி.) = 1. சேர்தல். “இணைந்துடன் வருவதிணைக்கை” (சிலப். 3 18, உரை). 2. உடன்படுதல். 3. ஒத்தல் (தணிகைப்பு. நாட்டு. 53).

இணைத்தல் (செ. குன்றாவி.) = 1. சேர்த்தல். 2. கட்டுதல்.

“இணைத்த கோதை”     (திருமுருகு. 200).

இணை = 1. சேர்வு. 2. ஒப்பு. 3. இரண்டு. 4. இரட்டை. “குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்” (தொல். 1261). 5. துணை. 6. உதவி.

இணைப்பு = 1. இசைப்பு. 2. ஒப்பு. “”இணைப்பரும் பெருமை” (திருவாச. 3 46).