பக்கம் எண் :

49

எய் - எயிறு = 1. அம்புபோற் கூரிய பல். 2. பல்லரணை. எய் - எய்து. எய்துதல் = 1. நீங்குதல். “எய்தலில்லாத் திருவின்” (தஞ்சைவா. 386). 2. அணுகுதல். “நெடியோ யெய்த வந்தனம்” (புறம். 10). 3. சேர்தல். “தூநிறக் கங்கையாள் சூழ லெய்தினான்” (பாரத. குருகுல. 39). 4. அடைதல். “ஏமம் வைக லெய்தின்றா லுலகே” (குறுந். கட. வா.). 5. பொருந்துதல். “காலத்தோ டெய்த வுணர்ந்து” (குறள். 516). 6. நிகழ்தல். “எட்டி குமரன் எய்திய துரைப்போன்” (மணிமே. 4 64). 7. உண்டாதல். “மாசெனக் கெய்தவும்” (கம்பரா. சிறப். 6). 8. போதியதாதல். “சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணி” (ஐந். ஐம். 38).

Te. eyidu, M. eydu.

எய் - ஏ = 1. அம்பு. “ஏமுத லாய வெல்லாப் படைக்கலத் தொழிலு முற்றி” (சீவக. 370). 2.அம்பெய்யுந் தொழில். “ஏமாண்ட நெடும்புரிசை” (பு. வெ. 5 51). ஏ - ஏவு = அம்பு. “மாறிலேவு பூட்டி” (கந்தபு. காமதக. 66).

ஏவுதல் = 1. செலுத்துதல். 2. தூண்டிவிடுதல். 3. கட்டளை யிடுதல்.

ஏ - ஏகு. ஏகுதல் = 1. செல்லுதல். 2. நடத்தல்.

Te. egu, M. ehu.

ஏ - ஏது = ஒரு கருமம் அல்லது முடிபுசெய்யத் தூண்டுவது.

Skt. hetu.

உய் = (அய்) - Ay (Skt), to go

Ay, going

Ayana, going; walking, a road, a path; course, circulation: the sun’s road north and south of the equator; the half year; way, progress, manner; place of refuge, a treatise, etc.

உய் - இய் - i (Skt.), to go, walk; to advance, to arrive at, reach, obtain; to undertake anything; to escape; perfect tense; iyaya, ஒ. நோ :. இயவு, இயல், infinitive, etum, ஒ. நோ : எ - ஏகு.

cf. Gk. ei-mi, i-men: L. e-o, i-mus, i-ttr, &c; Lith. ei-mi, 1 go; Slav. i-ae, I go; i-ti, to go; Goth. i-ddja, I went.