பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

8

‘உல்’ என்னும் வேர்ச்சொல்

உல்1 (எரிதற் கருத்து வேர்)

உல் - உல. உலத்தல் = காய்தல், வற்றுதல், சாதல், அழிதல், முடிதல், கழிதல்.

உல - உலவை = வற்றிய கிளை.

“அலங்க லுலவை யேறி யொய்யென”         (குறுந். 79)

உல் - உலர். உலர்தல் = காய்தல், வாடுதல், M. ular.

உலர் - உலறு. உலறுதல் = வற்றுதல், வாடுதல், சினத்தல்.

உலறல் = கடுஞ்சினம் (திவா.)

உல் - உலை = நெருப்புள்ள அடுப்பு, சமைத்ததற்குக் காய்ச்ச வேண்டிய நீர், கொல்லன் உலை.

M. ula, K. ole.

உல் - உள் - உண் - உண்ணம் = வெப்பம்.

“உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு”     (தேவா. 510 6)

உண்ணம் - உஷ்ண (S.), un (Mhr.)

உண் - உண. உணத்தல் = காய்தல்.

மிளகாய்வற்றலை உணந்த மிளகாய் என்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்து வழக்கு.

உண - உணத்து. (பி.வி.). ‘தலை உணந்துவிட்டது’

‘தலையை உணத்து’ என்பன நெல்லை மாவட்ட வழக்கு.

உண - உணங்கு. உணங்குதல் = காய்தல்.

“தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்கும்”     (தமிழ்நா. 154)