M. unannu (உணங்ங), K. onagu. உணங்கு - உணக்கு (பி.வி.) “தொடிப்புழுதி கஃசா வுணக்கின்” (குறள். 1037) உல் - உர் - உரு. உருத்தல் = 1. அழலுதல். “ஆக முருப்ப நூறி” (புறம். 25 10). 2. பெருஞ்சினங் கொள்ளுதல். “ஒருபக லெல்லா முருத்தெழுந்து” (கலித். 39 23). 3. முதிர்தல். “பண்டை யூழ்வினை யுருத்தென்” (சிலப். 16 217). உரு = நெருப்பு. K., Tu. uri, to burn; L. uro, to burn; Armenian or, fire; Afghan or, wur; Heb. ur, fire or, light. உரு - உருகு. உருகுதல் = வெப்பத்தால் இளகுதல், மனநெகிழ்தல், மெலிதல். M. uruhu. உரு - உருக்கு (பி.வி.). உருக்குதல் = இளகச் செய்தல், அழித்தல், வருத்துதல். உருகு - உருக்கு = எஃகு, உருக்கின பொருள். M. urukku, K. urku, T. ukku. உரு - உரும் - உருமி. உருமித்தல் = வெப்பமாதல், புழுங்குதல். உரும் - உருமம் = வெப்பம், வெப்பமிக்க நண்பகல், கோடைக்காலம். உரும் - உரும்பு = கொதிப்பு. “உரும்பில் கூற்றத் தன்னநின்” (பதிற். 26 13) உரு - உருப்பு = 1. வெப்பம். “கன்மிசை யுருப்பிறக் கனைதுளி சிதறென” (கலித். 16 7). 2. அடுக்களை. 3. சினத்தீ. “உருப்பற நினைத்தனை யாதலின்” (பதிற். 50 16). 4. கொடுமை. “உருப்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகி” (பெரும்பாண். 447). உருப்பு - உருப்பம் = 1. வெப்பம். “அவணுறைந்தன உருப்பமெழ” (அரிச். பு. விவா. 104). 2. சினம். உள் - ஒள் - ஒண்மை = 1. விளக்கம். “ஒப்பின் மாநக ரொண்மை” (சீவக. 535) 2. இயற்கையழகு. “ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும்” (பெருங். உஞ்சைக். 34, 151) 3. நல்லறிவு. “ஒண்மை யுடையம் யாம்” (குறள். 844). ஒண்ணுதல் = ஒள்ளிய நெற்றியுடைய பெண். |