பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

“ஒண்ணுதற் கோஒ உடைந்ததே”      (குறள். 1081)

ஒள் - ஒள்ளி = வெள்ளி (சுக்கிரன்), செம்பொன்.

ஒள்ளிமை = அறிவு விளக்கம்.

ஒள்ளியன் = அறிவுடையோன்.

“ஒளியார்முன் ஒள்ளிய ராதல்”         (குறள். 714)

ஒள்ளியோன் = வெள்ளி (சுக்கிரன்)

ஒள்ளொலி = மிக்கவொளி.

ஒள் - ஒப்பு - ஒட்பம் = அறிவு.

“கல்லாதா னொட்பம் கழியநன் றாயினும்”     (குறள். 454)

ஒள் - ஒளி = வெளிச்சம், மின்னல், கதிரவன், திங்கள், உடு, நெருப்பு, வெயில், விளக்கு, கண், அறிவு, புகழ் பெருமை, கடவுட்டன்மை.

K. ola, M. oli.

ஒளியவன் = கதிரவன்.

ஒளி - ஒளிர் - ஒளிறு.

ஒளிர்தல் = விளங்குதல்.

“உள்ளத் தொளிர்கின்ற வொளியே”      (திருவாச. 37, 5)

ஒளிறுதல் = விளங்குதல்.

“ஒளிறுவாள் மறவரும்”          (மணிமே. 1 68)

உல் - எல் = 1. நெருப்பு. 2. ஒளி. 3. கதிரவன். “எற்படக் கண்போல் மலர்ந்த” (திருமுருகு. 74).

cf. Gk. helios, sun.

4. வெயில் (பிங்.). 5. பகல். “எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி” (புறம். 170). 6. நாள் (பிங்.).

எல் - எல்லவன் = 1. கதிரவன். “எல்லவன் வீழு முன்னம்” (பாரத. பதினெட். 119). 2. திங்கள் (அக. நி.).

எல் - எல்லார் = தேவர். “பனிவானத் தெல்லார் கண்ணும்” (சீவக. 364). எல் - எல்லோன் = கதிரவன் (பிங்.)

எல் - எல்லி = 1. கதிரவன் (பிங்.) 2. பகல். “இரவோ டெல்லியு மேத்துவார்” (தேவா. 344 8).

எல்லினான் = கதிரவன்.