ஊது - பூது - பூத்து. பூத்துப் பூத்தென்று அடுப்பூதிக் கொண்டிருக்கின்றான் என்பது உலக வழக்கு. ஊது - ஓது. ஓதுதல் = 1. காதிற்குள் ஊதுவதுபோல், சமயகுரவன் அருமறை மந்திரத்தைச் சமைந்த மாணவனுக்குச் சொல்லுதல். 2. மருமச் செய்தியை ஒருவன் இன்னொருவன் காதிற்குள் மெல்லச் சொல்லுதல். |