பக்கம் எண் :

13

கள்ளம் - ம. கள்ளம், தெ. கல்ல.

கள்வன் - ம. கள்வன், து. கள்வே, வ. கலம. களவு- ., ., து. களவு, Gk. klepto (to steal), L. clam (secretly).

கரத்தல் = கவர்தல். கரவு = களவு (திவா.). கரவர் = கள்வர் (பிங்.). கரவடம் = களவு (திவா.). கரவடர் = திருடர் (திவா.). கரவட நூல் = களவுநூல். (சிலப். 16 180, அரும்.).

2. வஞ்சனை

வஞ்சனை யென்பது ஒன்றை உள்ளத்தில் மறைத்து வைத்தல்.

கள்ளம் = வஞ்சனை. “கள்ளம் பிறவோ பசப்பு’’ (குறள். 1184). களவு= வஞ்சனை. “நங்களவ றுத்துநின் றாண்டமை’’ (திருவாச. 5 35). கரவு = வஞ்சனை. “களவறிந்தார்நெஞ்சிற் கரவு’’ (குறள். 288). கரவடம் = வஞ்சகம். “மனத்திலே கரவடமாம் வேடம்’’ (தண்டலை. சத. 29).

3. பொய்

பொய்யாவது சொல்லால் ஒன்றை மறைத்தல். கள்ளம் = பொய். “கள்ளமேபேசி’’ (தேவா. 1115 6). கரவு = பொய். “கரவெனு முன்ற னூலில்’’ (திருவாத. பு. புத்த. 55).

4. ஈயாமை

ஈயாமையாவது ஒருவன் தன் பொருள் நுகர்ச்சியைப் பிறருக்கு மறைத்தல்.

கரத்தல் = கொடாதிருத்தல் (பிங்.). கரு - கரும் - கருமு. கருமுதல்= பிசினித்தனம் பண்ணுதல். கருமி = கஞ்சன்.

5. கரைதல்

கரைதலாவது ஒரு பொருள் சிறிது சிறிதாய் மறைதல்.

கர - கரை. கரைதல் = சிறிது சிறிதாய்க் கரத்தல், உருகுதல்.

கர - . கரக்கு, தெ., ., து. karagu.

6. நீக்குதல்

நீக்குதலென்பது ஒன்றை ஓரிடத்தில் இல்லாவாறு மறைத்தல்.

கள் + தல் = கட்டல் (களை பறித்தல்). கள் - களை. களைதல் = நீக்குதல். கள் - ., க. கள்.