| எழுவாய் | வேற்றுமையடி | ஏன் - யான் | என் | ஏம் - யாம் | எம் | ஏங்கள் - யாங்கள் | எங்கள் |
ம. எங்ஙள். தெ. ஏனு, ஏ; க. யான், ஆன். ம. ஞாங்கள்; தெ. ஏழு, மேமு; க. ஆம், ஆவு. யகரம் மொழிமுதலெழுத் தன்மையாலும், எகரத்திற்கும் யகரத்திற்குமுள்ள நெருங்கிய தொடர்பினாலும், 2ஆம் நிலை வடிவுகளும் முதல்நிலை வடிவுகள் ஒத்தே வேற்றுமையடி கொண்டன. (மூன்றாம் நிலை) | எழுவாய் | வேற்றுமையடி | யான் - நான் | நன் | யாம் - நாம் | நம் | யாங்கள் - நாங்கள் | நங்கள் |
ம. ஞான்;க. நானு, நா;தெ. நேனு, நே. ம. நாம், நேரம், நம்மள்;தெ. மனமு;க. நாவு. இவற்றுள், நன் என்னும் வேற்றுமையடி இற்றைத் தமிழில் வழக்கிறந்தது. மொழிகளில் இன்றும் வழங்குகின்றது. அது குடியேற்றப் போற்றிக் காப்பின் (Colonial Preservation) பாற்படும். இற்றை வழக்கில் இல்லாத பழஞ்சொற்களும் சொல் வடிவு களும், முழுகிப்போன குமரிக்கண்ட உலகவழக்கிலும் இறந்துபட்ட இலக்கிய வழக்கிலும் இருந்தன என்றறிதல் வேண்டும். நங்கள் என்பது இற்றை இலக்கிய வழக்கில் உள்ளது. “நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே” (திவ். பெருமாள். 7 3) “நங்கள் வரிவளை யாயங்காளோ” (திவ். திருவாய். 8 2 1) கூர்மதிவாய்ந்த குமரிக்கண்டப் பொதுமக்கள், யகர முதல் நகர முதலாகத் திரிந்த நிலையைப் பயன்படுத்தி, பன்மை வடிவில் |