‘ஏ’ ஈற்று வினா வெழுத்தாகவும் வரும். எ - டு : வந்தானே = வந்தானா. ஏது = 1. எது. 2. எப்படிக் கிடைத்தது. ஏ - ஏவன், ஏவள், ஏவர், ஏது, ஏவை. ஏன் = என்ன காரணம்பற்றி. K., M. en. ஏ - யா. யா = யாவன், யாவள், யாவர், யாவது, யாவை. யா = யாவை. யாவர் - யார் - ஆர். யாவது - யாது. ம. யாவன், யாவள், யாவர் (யார், ஆர்), யாது, யாவை. க. யாவனு, யாவளு, யார், யாவது, யாவவு. தெ. எவடு, ஏதி, ஏவரு, ஏதி, ஏவி. யா - யாங்கு, யாண்டு = எங்கு. யாங்கு - யாங்கண். K. hege. (ஹேகெ, Te. eda (ஏட). யாங்கு - யாங்கனம் - யாங்ஙனம் - யாங்ஙன். யா - ஆ - ஓ. ஆவும் ஓவும் ஈற்று வினாவெழுத்துகள். எ - டு : அவனா, வந்தானா அவனோ, வந்தானோ “ஆஏ ஓஅம் மூன்றும் வினா அ” (தொல். 32) ஏ - எ = எந்த. எ - டு : எக்காலம், எப்படி. K., M. e. எ - எம்மை = 1. எவ்வுலகம். “எம்மை யுலகத்தும்” (நாலடி. 132). 2. எப்பிறப்பு. “எம்மைக் கிதமாக” (கம்பரா. சடாயுவுயிர். 99). எவ்வது (= எவ்வாறு) எ - எந்த. எந்தா, எந்தோ, எதா, எதோ, எதோள், எதோளி = எங்கு. எங்கு, எங்கே (where), எங்கைக்கு (whither). ம. எங்ங. எங்கு - எங்கண். எங்கு - எங்கிட்டு. எங்கு - எங்கனம் - எங்ஙனம் - எங்ஙன். எம்பர் = எங்கு. “எம்பரு மின்மையின்” (பெருங். நரவாண. 2 13) |