பக்கம் எண் :

95

என்னத்தான் = எக்குலத்தான் (வடார்க்காட்டு வழக்கு)

என்னர் = யாவர்.

“அருந்தொடைச் சித்திரமதனை யென்னரே யளந்தறிபவர்”     (இரகு. திக்கு. 196)

என்னரும் = எதும், சிறிதும், எவ்வளவும்.

“என்னருங் கருதான்”             (பெருங். நரவாண. 2 41)

என்னோரும் = 1. எத்தன்மையோரும். 2. எல்லாரும். “என்னோரு மறிய எடுத்துரைத்தன்று” (பு.வெ. 9 6, கொளு).

என்னது - எந்து = 1. என்ன. “அதெந்துவே” (திருவாச. 29).

Te., M. endu.

2. எவ்வாறு. “செயலாம் வழிமற் றெந்தோ” (தணிகைப்பு. பிரம. 4).

M. endu, K. entu.

இனி, எது - எத்து - எந்து என்றுமாம்.

என்னது - எற்று (என் + து - ) எற்றுக்கு.

என்ன. ம. enna

என்ன - என்னவோ - என்னமோ.

என்று = எப்போது.

M. enru, K. endu.

என்றூழி = என்றைக்கும்.

என் - எனை = என்ன, எந்த, எத்தகைய.

எனைத்து = எவ்வளவு.

எனையவன் - எனையன், எனைவன் = யாவன்.

“எனைவ ராயினு”            (பெருங். வத்தவ. 3 22)

தன்மைப் பெயரடியும் வினாச்சொல்லடியுமான ஏயிரண்டும், உயர்வும் எழுச்சியும் குறித்த ஏ யென்னும் உரிச்சொல்லினின்று தோன்றியிருக்கலாம்.

“ஏபெற் றாகும்”            (தொல். 788)

குறிப்பு: தன்மைப் பெயரின் ஏகாரவடி அண்மைச் சுட்டான ஈகாரத்தின் திரிபாகவும், வினாச்சொல்லின் ஏகாரவடி எழுச்சி குறித்த ஏகாரமாகவும் இருக்கலாம்.