பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

14

‘ஒல்’ என்னும் வேர்ச்சொல்

ஒல் (பொருந்தற் கருத்து வேர்)

உல் - ஒல்.

ஒல்லுதல் = பொருந்துதல், ஒத்தல், உடன்படுதல், இயலுதல்.

ம. ஒல்லு.

ஒல்லுநர் = நண்பர். ஒல்லார் = பகைவர்.

ஒல் - ஒர் = ஒரு. ஒர் - ஒராங்கு.

ஒர் - ஒரான். ஒரானொரு = ஏதோ ஒரு, a certain.

ஒர் - ஒரி. ஒரித்தல் = ஒற்றுமையாயிருத்தல்.

ஒர் - ஒரு. க. ஒர், ம. ஒரு.

ஒரு - ஒருக்கு. ஒருக்குதல் = ஒன்றுசேர்த்தல்.

ஒருக்கு - ஒருக்க = ஒருமுறை, ஒன்றுபோல், என்றும்.

ஒருக்கு - ஒருக்கம் = ஒரு தன்மை.

ஒரு - ஒருங்கு.

ஒரு + அந்தம் = ஒருவந்தம் (ஒருதலை).

ஒரு + கணி = ஒருக்கணி - ஒருக்களி.

ஒரு + சரி = ஒருச்சரி - ஒஞ்சரி.

ஒரு - ஒருத்தன். Kur. ஒர்த்.

ஒரு - ஒருத்தி. தெ. ஒர்த்தி.

ஒரு - ஒருத்து = மனவொருமைப்பாடு.

ஒருதலை = உறுதி, தேற்றம்.

ஒரு + படு = ஒருப்படு