ஒரு - ஒருமை.ம. ஒரும, தெ. ஒரிம. ஒருமை - ஒருமி.ம. ஒருமி. ஒரு - ஒரே. ஒரு - ஒதோ. ஒரோவொரு = ஏதோவொரு. ஒர் - ஓர். ஓர்தல் = உற்றுநோக்குதல், ஆராய்தல். ஓர் - ஓரட்டும் = எல்லாம். ஓர் - ஓரான். ஓரானொரு = ஏதோவொரு. ஓர் - ஓராம் = முதலாம். ஓர் - ஓர்மை = ஒற்றுமை, துணிவு. ஓர்மை - ஓர்மி. ஓர்மித்தல் = மனந்திடப்படுதல். ஓர்மி - ஓர்மம் = மனத்திடம், திடாரிக்கம். ஓர் - ஓராங்கு = ஒருசேர. ஓர் - ஓரம் = பொருந்திய பக்கம், ஒரு பக்கம், விளிம்புப் பக்கம்.ம. ஓரம்,தெ. ஓர,க. ஓர. ஓர் - ஓசை = விண்மீன் கூட்டம். ஓர்படியாள் - ஓர்ப்படியாள் (இராசி) ஒல் - ஒன். ஒன்னுதல் = பொருந்துதல். ஒன்னார் = பகைவர். ஒன் - ஒன்று. ஒன்றுதல் = பொருந்துதல். ஒன்றார் = பகைவர். க. ஒந்து,தெ. ஒனரு. ஒன்று = 1. (முதலெண்).ம. ஒன்னு,தெ. ஒண்டு,க. ஒந்து,து. L. unus, E. one. ஒன்றுக்கு (இடக்கரடக்கல்) = சிறுநீர் கழிக்க. ஒன்று - ஒன்றி. ஒன்றித்தல் = பொருந்துதல், ஒற்றுமைப் படுதல். ஒன்றி = தனிமை.க. ஒண்ட்டி,தெ. ஒண்டு. ஒன்று + மை = ஒற்றுமை. ஒன்று - ஒற்றை. ஒன்று - ஒற்று. ஒற்றதல் = பொருந்தச் சேர்த்தல் அல்லது தாக்குதல், அல்லது பார்த்தல். தெ. ஒத்து,க. ஒத்து. |