பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

ஒற்று - ஒற்றன்

ஒற்று - ஒற்றடம். ஒற்று - ஒத்து - ஒத்தடம் - ஒத்தணம்.தெ. ஒத்தடமு,க. ஒத்தட.

ஒற்று - ஒத்து = ஊமைக் குழல்.

ஒற்று - ஒற்றி - ஒற்றித்தல் = ஒற்றையாயிருத்தல், ஒற்றுமைப் படுதல்.

ஒற்றிக்கிரட்டி = ஒன்றிற்கிரண்டு. ஒற்றி = பொருந்த வைக்கும் அடைவு.

ஒல் = ஒள் - அள் - அள்ளுதல் = செறிதல்.ம. அள்ளு.

அள் - அள்ளல் = நெருக்கம்.

அள் - அள்ளை = பக்கம்

அள் - அள - அளவு. அளவுதல் = கலத்தல். அளவு - அளாவு.

அளத்தல் = 1. கலத்தல். 2. அளவளாவுதல் (கல்லா. 18 36).

3. அளவிடுதல்.

ம. அள,க.அள.

அள - அளவி.

அள - அளவு.ம. அளவு,க. அளவு,து.அல.

அள - அளவை.

அளவு - அளபு - அளபெடை.

அள் - (அய்) - அயல் = அருகு, பக்கம், புறம்பு. ம.அயல்.

அயல் - அசல் = புறம்பு.

அள் - அளை. அளைதல் = கலத்தல், கூடியிருத்தல்,

“ஆர்வமோ டளைஇ”         (தொல். பொருள் 146)

அள் - அளி. அளிதல் = கலத்தல்.

”சிறியார்களோ டளிந்தபோது”     (கம்பரா. ஊர்தே. 154)

அள் - அண் - அண்ணு. அண்ணுதல் = கிட்டுதல்.

அண் - அண்மை, அண்ணிமை, அணிமை, அணுமை.

அண் - அண்மு. அண்முதல் - கிட்டுதல். அண்மு - அண்பு.

அண் - அணன் = பொருந்தியவன்.