பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

11

சுல்4 (வளைதற் கருத்துவேர்)

வளைதல் என்பது, சாய்வு, வளைவு, கோணல், வட்டம், உருண்டை, முட்டை, உருளை முதலிய பல கருத்தைத் தழுவும்.

சுல் - சுலவு. சுலவுதல் = 1. சுற்றுதல். “அரவூறு சுலாய்மலை தேய்க்கும்’’ (திவ். திருவாய். 7 :4 :2). 2. சுழலுதல். “சுலவுற் றெதிர்போகிய தூவியனம்’’ (நைடத. அன்னத். 45).

சுலவு - சுலாவு. சுலாவுதல் = சூழ்தல்.

“விரைகமழ் சோலை சுலாவி யெங்கும்’’     (தேவா. 418 1).

சுலாவு = (வளைந்து வீசும்) காற்று. “சுலாவாகி (தேவா. 1227:3).

சுல் - சில் = 1. வட்மான துண்டு. 2. கடற்சில் (வட்டமான கடற்செடிவிதை). 3. உருளை, தேர்க்கால்.

சில் - சிலை = 1. வளைந்த வில். “கொடுஞ் சிலைக்கைக் கூற்றினை’’ (பு. வெ. 1 10). 2. வானவில். “சிலைத்தா ரகலம்’’ (புறம். 61 14). 3. சிலையோரை (தனுராசி) (விதான யாத். 13). 4. சிலை (மார்கழி) மாதம். “சிலையில்வெங் கதிரைத் திங்க ளொன்றிய’’ (பாரத. முகூர்த். 4).

சில் - சிலந்தி = 1. வட்டமான நூல்வலை யமைக்கும் பூச்சி. 2. சிலந்திப்பூச்சி போன்ற கொப்புளக்கட்டி. ம. சிலன்னி, சிலந்தி - சிலம்பி. “சிலம்பி வானூல் வலந்த மருங்கில்’’ (பெரும்பாண். 236).

சுல் - சுன் - சுன்னம் = சுழி. சுன்னம் - பிரா. சுன்ன, . சூன்ய. சுன் - சூன் = வளைவு. ‘சூன் நிலம்’ (உ. வ.).

சுன் - சின் - சினை = 1. முட்டை (பிங்.) “சினைவளர் வாளையின்’’ (பரிபா. 7:38). 2. மக்கள் விலங்கு பயிர் முதலிய உயிரிகளின் கரு.