போற் சூழ வருதல், “மாதிரந் துழவுங் கவலை நெஞ்சத்து’’ (புறம். 174) துழவு - துழவை = துழாவியட்ட (கிண்டிச் சமைத்த) கூழ். “அவையாவரிசி யங்களித் துழவை’’ (பெரும்பாண். 275). 2. சிறுபடகைச் சுக்கான்போல் திருப்பஉதவும் மூங்கிற்பற்றை (யாழ்ப்.). துழவை தொடுத்தல் = தண்டு வலித்தல் (W.). துழனி = கிண்டுவதுபோல் நோட்டஞ் செய்து கூறும் குற்றம். அவன் ஓயாமல் துழனி பேசுவான். (நெ. வ.). துழ - துழா. துழாதல் = துழவுதல், சூழ்ந்து வீசுதல். “பனிவாடை துழாகின்றதே’’ (திவ். இயற். திருவிருத். 35). துழாவாரம் = பலர் கூடிப் பிறர் செய்திகளைக் கிண்டிப்பேசும் வம்புப்பேச்சு. துழா - துழாவு. துழாவுதல் = 1. கையால் அளைதல். 2. கிளறுதல். 3. தண்டுவலித்தல். “துளிபடத் துழாவு திண்கோற் றுடுப்பு’’ (கம்பரா. குகப். 60). 4. தடவுதல். “துழாநெடுஞ் சூழிரு ளென்று’’ (திவ். இயற். திருவிருத். 36). 5. தடுமாறுதல். “எண்ணந் துழாவுமிடத்து’’ (திவ். இயற். திருவிருத். 28). 6. நாடுதல். “வானுநிலனுந் திசையுந் துழாவும்’’ (கலித். 145 43). 7. ஆராய்தல், 8. அளவளாவுதல் (பிங்.). துழ - துழை. துழைதல் = துழாவுதல், வள்ளத் துடுப்பால் துழாவிப் படகைச் செலுத்துதல். (நாஞ். வ.). துள் - துளு - துளுப்பு. துளுப்பிடுதல் = கலக்குதல். “குன்றிற் கருங்கடல் துளுப்பிட் டாங்கு’’ (சீவக. 1112). துளுப்பு - துடுப்பு = 1. சட்டுவம். “இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு’’ (பு. வெ. 6 23). 2. அகப்பை. “துடுப்பிற் றுழந்த வல்சி’’ (புறம். 26). 3. துழாவுமனை. 4. அகப்பை போன்ற காந்தள் மடல். “பஃறுடுப் பெடுத்த வலங்குகுலைக் காந்தள்’’ (அகம். 108). 5. வலிப்புத்தண்டு. 6. பூங்கொத்து (யாழ். அக.). ம. துடுப்பு, க. துடுப்பு, தெ. துடுப்பு (d). துளு - துடு - துடுவை = நெய்த் துடுப்பு. “துடுவையா னறுநெ யார்த்தி’’ (திருவிளை. திருமணப். 184). துழை - துடை. துடைத்தல் = 1. தடவி நீக்குதல். “வான் றுடைக்கும் வகைய போல’’ (புறம். 38). 2. பெருக்கித் தள்ளுதல். |