பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

ம. துரவு, தெ. தொருவு (பெருங்கிணறு).

துர - துரப்பு = 1. மலையிற் குடையப்பட்ட பாதை. (நாஞ். வ.). 2. உள்முடுக்குகை. “துரப்பமை யாணி’’ (பொருந. 10).

துரப்புதல் = துருவித் தேடுதல், தேடுதல். “எனதொரு வாய்க்கு நால்வாய்க்குI, 181:3)

துரப்பு - துரப்பணம் = துளையிடுகருவி.

ம. துரப்பணம். துரப்பு - துரப்பை = துழாவித் தூர்க்கும்வார்கோல் (நாஞ். வ.).

துர - துரக்கு - திரக்கு. திரக்குதல் = தேடுதல். ‘ஊரெங்குந் திரக்கியும் திருட்டுப்பயல் அகப்படவில்லை’ (நாஞ். வ.).

துர - துற. துறத்தல் = துளைத்தல், துளைத்து உள்ளிருப்பதை வெளிப்படுத்துதல்.

துற - துறவு = 1. மருமம், மறைபொருள். “உறவுகொண் டவரவர் துறவுகண்டேன்’’ (சீதக். 41). 2. வாய்ப்பான நிலை. “சோடாய் மரத்திற் புறவிரண்டிருந்திடத் துறவு கண்டே வேடுவன்’’ (குமரே. சத. 85). 3. வெளியிடம்.

துற - துறவை = 1. வெளியிடம். 2. வெளிப்படையானது.

துற - துறப்பு = 1. துளைத்துத் திறத்தல். 2. திறக்கும் திறவுகோல். 3. திறக்கப்படும் பூட்டு (பிங்.).

துறப்புக் குச்சு = திறவுகோல்.

துரப்பணம் - துறப்பணம்.

துற - திற. திறத்தல் = 1. கதவு திறத்தல். “அறவை யாயின் நினதெனத் திறத்தல்’’ (புறம். 44). 2. பூட்டைத் திறத்தல். 3. சுவர் நடுவே யிடித்து வழியமைத்தல். 4. வானத்தை மூடியிருந்த முகில் நீங்குதல். 5. துன்பம் நீங்க வழியுண்டாதல். வாளால் வழிதிறந்தான் பணம் என்பது ஒரு பழங்காசு (Pudu. Insc. 767). 6. குடை, பொத்தகம், ஆடை முதலியவற்றை விரித்தல். 7. திரையை நீக்குதல். 8. மண்டை வெடித்தல் அல்லது பிளத்தல். தடியடியால் தலை திறந்துவிட்டது. (உ.வ.) 9. மனத்திலுள்ள மருமத்தை வெளிப்படுத்துதல். 10. துளைத்தல்.

ம. துறக்க, தெ. தெர, க. தெறெ.

திறந்த மடம் = நாற்புறமும் அடைப்பில்லாக் கூடம்.

திறந்தமனம் = மறைவாக உள்ளொன்றும் இல்லாத உள்ளம்.