பக்கம் எண் :

17

குல் - குள் - கள். கள்ளுதல் = 1. கூடுதல், பொருந்துதல், ஒத்தல். ‘கள்ள’ ஓர் உவமையுருபு. “கள்ளக் கடுப்ப’’ (தொல். பொருள் உவம. 11).

கள் - களம் = 1. கூட்டம். 2. கூடுமிடம். 3. நெற்களம். “காவலுழவர் களத்தகத்துப் போரேறி’’ (முத்தொள். 65). 4. போர்க்களம். “ஈரைம்பதின்மரும் பொருதுகளத் தொழிய’’ (புறம். 2 15). 5. அவை. 6. இடம் (திவா.).

களம் - களமர் = 1. மருதநில மாக்கள். “கருங்கை வினைஞருங் களமருங்கூடி’’ (சிலப். 10 : 125). 2. போர் மறவர். “கள்ளார் களம ரிருஞ்செரு மயக்கமும்’’ (மதுரைக். 393). களமன் - வ. கலம.

களம் - களமம் = (மருதநிலத்து) நெல். களமம் - வ. கலம.

களம் - களன் = அவை. “களனஞ்சி’’ (குறள். 730).

களம் - களர் = கூட்டம் (சூடா.).

களர் - களரி = 1. அவை. “அரங்கேற்றுங் களரியிலே’’ (திருக்கை). 2. போர்க்களம். “பூசற் களரியிலே’’ (பு. வெ. 2 6. கொளு, உரை). 3. நாடகம்கல்வி மல் முதலியன பயிலும் அரங்கு. 4. வழக்கு மன்றம் (கோயிலொழுகு. 64). 5. தொழிற்சாலை.

களம் - களன் - கழனி = 1. மருதநிலம் (பிங்.). 2. வயல். “கழனியுழவர்’’ (புறம். 13 11). 3. சேறு.

கள - (களகு) = களகம் = 1. நெற்கதிர். “வண்களக நிலவெறிக்கும்’’ (திவ். பெரியதி. 6 9 10). 2. சுண்ணாம்புச் சாந்து. “களகப் புரிசைக் கவினார்...... . காழி’’ (தேவா. 112 3).

களகம் - களபம் = 1. கலவை (சூடா.). 2. சுண்ணச்சாந்து. “நுண்களபத்தெளிபாய’’ (திருக்கோ. 15). 3. கலவை மணச்சாந்து. “புலிவிரா யெறிந்திடக்களபம் போக்குவார்’’ (இரகு. இரகுவுற். 26).

ஒ.நோ : மண்டகம் - மண்டபம், வாணிகம் - வாணிபம்.

களகு - கழகு = கழகம். கழகு - கழகம் = 1. பேரவை. “கழக மேறேல்நம்பீ’’ (திவ். திருவாய். 6 2 6). 2. புலவரவை (திவா.). 3. கல்வி பயிலும் இடம். “கந்தனை யனையவர் கலைதெரி கழகம்’’ (கம்பரா. நாட்டுப். 48). 4. படைக்கலம்மற்போர் முதலியன பயிலும் இடம் (திவா.). 5. கவறாடும் இடம். “கழகத்துக் காலைபுகின்’’ (குறள். 937). ம. கழகம்.

கழகம் என்னுஞ் சொல், இயல்பாக ஓர் அவையை அல்லது அவைக்களத்தைக் குறிக்குமேயன்றி, கவறாடும் அரங்கைக்