பக்கம் எண் :

29

ம. கொழுந்நு.

கொழுந்து - கொழுந்தாடை = கரும்பின் நுனித்தழை.

குழ - குத - கத - கதலி - கசளி = கெண்டைக் குஞ்சு.

குல் - குர் - குரு. குருத்தல் = 1. தோன்றுதல். “அதினின்று மொருபுருடன் குருத்தான்’’ (விநாயகபு. 72:4). 2. வேர்க்குரு உண்டாதல்.

குரு - குருத்து = 1. இளந்தாள், இளந்தோகை, இளவோலை. 2. கரும்புநுனி. “குருத்திற் கரும்புதின் றற்றே’’ (நாலடி. 211). 3. காதுக்குருத்து. 4. இளமை. 5. வெண்மை (பிங்.). 6. யானை மருப்பின் உட்பகுதி. “ஆளி நன்மான்.... . வேழத்து வெண்கோடு வாங்கிக் குருத்தருந்தும்’’ (அகம். 381).

. குருத்து.

குருத்து - குருந்து (பிங்.) = 1. குழந்தை. 2. வெண்குருத்து.

குருந்து - கருந்து = மரக்கன்று (உ. வ.). குரு - குருகு. 1. பனங்குருத்து. “குருகுபறியா நீளிரும் பனைமிசை’’ (பரிபா. 2:43). 2. இளமை (சூடா.). 3. விலங்கின் குட்டி, “சிங்கக் குருகு’’ (திவ். திருப்பா. 1, வியா.). 4. வெண்மை (திவா.).

வெண்மைக் கருத்து, பனங்குருத்தினின்று தோன்றிற்று.

. தெ., து. குரு.

குருகுகிழங்கு = இளங்கிழங்கு.

குரு - குரும்பை = 1. தென்னை பனைகளின் இளங்காய். “இரும்பனையின்குரும்பை நீரும்’’ (புறம். 24 2). 2. இளநீர். “குன்றுங் குரும்பையும் வெறுத்தநின் னிளமுலை’’ (கல்லா. 52:8)

ம. குரும்ப, . கரும்பெ.

குரு - குருள் - குருளை = 1. குழந்தை. “அருட்குரவாங் குருளை’’ (சி. சி. பரபக். பாயிரம், 4). 2. நாய், பன்றி, புலி, முயல், நரி முதலியவற்றின் குட்டி.

“நாயே பன்றி புலிமுயல் நான்கும்
ஆயுங் காலை குருளை யென்ப’’

“நரியும் அற்றே நாடினர் கொளினே’’      (தொல். மரபு. 8, 9).

3. பாம்பின் குட்டி. “சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை’’ (குறுந். 119)