குன்றுதல் = 1. குறைதல். 2. சுருங்குதல். 3. தளர்தல். 4. நிலை கெடுதல். “குன்றி னனையாருங் குன்றுவர்’’ (குறள். 965). குன்று = சிறுமலை. குன்று - குன்றம் = பெருங்குன்று. ம. குன்னு - குன்னம். தெ., க. கொண்ட. குன்றி = சிறிய குன்றிமணி. “குன்றுவ குன்றி யனைய செயின்’’ (குறள். 965). ம. குன்னி. குன் - குன்னு. குன்னுதல் = குக்குதல், உடம்பு சுருங்குதல். குன் - குன்னா. குன்னாத்தல் = உடம்பு குளிரால் ஒடுங்குதல். “குன்னாக்க வென்பாரு முளர்’’ (நெடுநல். 9, உரை). குன் - குன்னி = சிறியது, நுண்ணியது. |