பக்கம் எண் :

37

4

குல்2 (வளைதற் கருத்து வேர்)

அடிக்கருத்து (வளைதல்)

வளைதற் கருத்து, இயன்முறையில் வளைவு, சுருட்சி, வட்டம், வளையம், உருண்டை, உருளை முதலிய பண்புக் கருத்துகளையும்; செயன்முறையில் வளைதல், சுருள்தல், திரிதல், சூழ்தல், சுற்றுதல், சுழலுதல், உருளுதல் முதலிய வினைக்கருத்து களையும் தழுவும்.

வளைவு என்னும் பண்பின் பெயரும், வளைதல் என்னும் வினையின் பெயரும், அப் பண்பையும் வினையையுங் கொண்ட பொருள்களை ஆகுபெயராகக் குறிக்கும்.

கோணல், சாய்தல் என்பன வளைதலின் முந்திய நிலைக ளாதலின், அவையும் அதனுள் அடங்கும்.

குல் - குலவு. குலவுதல் = 1. வளைதல். “குலவுச்சினைப் பூக்கொய்து’’ (புறம். 11 4). 2. உலாவுதல். “எமதன்னையை நினைத்தே குலவினனோ’’ (சிவரக. விசயை. 14).

L. curvus, E. curve.

குலாவுதல் = வளைதல். “குலாவணங்கு வில்’’ (யாப். வி. 22).

குல் - குலுத்தம் = வளைந்த காயுள்ள கொள். . குலுத்த (guluttha).

குலுக்கை = உருண்டு நீண்ட குதிர். குலுக்கை - குலுப்பை.

குல் - குள் - குளம் = 1. வளைந்த நெற்றி. “திருக்குள முளைத்தகட் டாமரை’’ (கல்லா. 31 9). 2. வெல்லவுருண்டை (சூடா.).

. குல (gula). குளம் - குளகம் = வெல்லவுருண்டை.

குளியம் = 1. உருண்டை (அக. நி.). 2. (மாத்திரை) மருந்து (பிங்.).