குளிகை = மாத்திரை யுருண்டை. வ. குளிகா (gulika). குளியம் - குழியம் = 1. வளைதடி. 2. மணவுருண்டை. (சிலப். 14:171. அரும்.). திரட்சி (திவா.). L. globus, glomus E. globe. குழலுதல் = சுருளுதல். “கடைகுழன்ற கருங்குழல்கள்’’ (சீவக. 164). குழல் = மயிர்க்குழற்சி. “குழலுடைச் சிகழிகை’’ (சீவக. 1092). ம. குழல். குள் - (குய்) - குயம் = வளைந்த அரிவாள். “கொடுவாய்க் குயத்து’’ (சிலப். 10:30). குல் - (குர்) - குரங்கு. குரங்குதல் = வளைதல். “இலைப் பொழில்குரங்கின’’ (சீவக. 657). குரங்கு = வளைவு. “குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து’’ (சிலப். 10 157). 2. கொக்கி. OE. cranc, crinc, E. crank. குரவை = வட்டமாக நின்று பாடியாடுங் கூத்து. Gk. koros (orig. a dance in a ring). L. chorus, E. chorus, choir, quirs. குருளுதல் = சுருளுதல். “குருண்ட வார்குழல்’’ (திருவிசை. திருவாலி. 1:3). குருள் = 1. மயிர்ச்சுருள். 2. பெண்டிர் தலைமயிர் (பிங்.). வ. குருல. LG., Du., O. Fris. krul, G. krol, OE. crol, crul, E. curi. குருகு = 1. வளையல். “கைகுவி பிடித்துக் குருகணி செறித்த’’ (கல்லா. 44 22). 2. வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவைப் பொது. 3. நாரை. “வான்பறைக் குருகின் நெடுவரி பொற்ப’’ (பதிற். 83: 2). 4. ஓதிமம் (அன்னம்). “நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து’’ (நாலடி. 135). குரகம் = நீர்வாழ் பறவைப் பொது. AF., OF. grue (crane), OHG., OS. krano, OE. cran, E. crane. குரங்கு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு. கறங்கல் = 1. வளைதடி (அக. நி.). 2. சுழற்சி (பிங்.). கறங்குதல் = 1. சூழ்தல். “கறங்கிருள் மாலைக்கும்’’ (திருவள். 34). 2. சுழலுதல். “பம்பரத்து.... கறங்கிய படிய’’ (கந்தபு. திருநகரப். 28). ம. கறங்ஙு. கறங்கு = காற்றாடி. “காண்முக மேற்ற........ கறங்கும்’’ (கல்லா. கணபதி). கறங்கோலை = ஓலைக்காற்றாடி. “கறங்கோலை கொள்ளிவட்டம்’’ (திருமந். 2313). ON. hringr, OHG., OS., OE. hring, E. ring. |