பக்கம் எண் :

57

தாண்டிக் கடத்தல், 7. கடந்து வெல்லுதல். “கூற்றங் குதித்தலும் கைகூடும்’’ (குறள். 269). குதியாளம் = குதித்து விளையாடுதல்.

ம. குதி, க. குதி (gudi).

குதி - கூத்து. இனி, குத்து (குதி) - கூத்து என்றுமாம்.

ம., க. கூத்து.

குதி - கொதி. கொதித்தல் = 1. நீர் நெய் முதலியன பொங்கி யெழுதல் “குண்டிகை யிருந்த நீருங்... கொதித்த தன்றே’’ (கம்பரா. வருணனை. 61). 2. மிகச் சுடுதல். 3. சினம் பொங்குதல்.

குதி - குதிரை = குதித்துத் தாண்டும் விலங்கினம்.

. குதிர, தெ. குதிர, க., து. குதுரெ.

குதி - குதிர். குதிர்தல் = படிதல், குடியமர்தல், ஒழுங்காதல்.

தெ., க. குதுரு.

குதிர் - கதிர் = 1. நேராகச் செல்லும் ஒளியிழை. “விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி’’ (சிலப். 11 43). 2. கதிர்வீசும் இரு விண்சுடர். “கதிர் விலகிச் சூழும்’’ (சேதுபு. முத்தீர். 5). 3. குறட்டி னின்று (குடத்தினின்று) கதிர்போற் செல்லும் ஆரக்கால். 4, ஒளிக் கதிரும் ஆரக்காலும்போல் நெடுகக் கிளைக்கும் பயிர்க்கதிர். 5. நேராக நூல்நூற்குங் கருவி. “கதிரே மதியாக’’ (நன். 24)ம., க. கதிர், தெ. கதுரு (நூற்கதிர்). கதிர்த்தல்= 1. விளங்குதல், ஒளிவீசுதல். “கதிர்த்த நகை மன்னும்’’ (திருக்கோ. 396). 2. வெளிப்படுதல். “வாய்மை கதிர்ப்பச் சென்ற’’ (கம்பரந். 1). 3. மிகுதல். “கதிர்த்த கற்பினார்’’.

குதி - குதை = கதிங்கால் போன்ற வில்லின் அடி. “குதைவரிச் சிலைநுதல்’’ (கம்பரா. பால. நகர. 49). ம. குத.

குதைத்தல் = விற்குதையில் நாண் பூணுதல். “குதைக்கின்றன நிமிர் வெஞ்சிலை’’ (கம்பரா. உயுத். இராவணன் வ. 46).

குத்து - குத்தி - கத்தி = குத்தி வெட்டும் அல்லது அறுக்குங் கருவி. குத்து - கத்து = குத்திவெட்டு (இறந்துபட்ட வழக்கு). தத்து - கத்தி.

ம., தெ., க., து. கத்தி.

ஒ.நோ: ME. cutte, kitte, kette, Sw. kata (kuta), E. cut, இந்தி, காட் (வெட்டு).

குத்துக்கோடரி = குத்திவெட்டுங் கோடரி.

கத்தி + அரி = கத்தரி. கத்தரித்தல் = 1. சிறிது சிறிதாய் (கொஞ்சங் கொஞ்சமாய்) வெட்டியறுத்தல் (திவா.). 2. அறுத்தல். “தலைபத்துங்