பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

கரி - கரிச்சான் = கரிக்குருவி.

கர் - கரு. கருத்தல் = கறுப்பாதல். கருமா = 1. யானை (பிங்.). 2. பன்றி. “கருமாலுங் கருமாவாய்’’ (பெரியபு. திருஞான. 1003).

கரு - கருகு. கருகுதல் = 1. நிறங்கறுத்தல். 2. இருளுதல், “கருகு கங்குலிற்போதரும்’’ (உபதேசகா. கைலை. 46). 3. பயிர் தீதல்.

கருகு - கருக்கு = மருந்துச் சரக்கைக் கருக்கிக் காய்ச்சிய சாறு (decoction)

கருகு - கருகல் = 1. தீந்து போகை. 2. கருகின பொருள். 3. இருள் என்னும்பச்சைக் கற்குற்றம் (சிலப். 14 184, உரை), 4. மங்கலொளி. 5. பொருட்டெளிவின்மை.

கருக்கு - கருக்கம் = கார்முகில்.

“கருக்க மெல்லாங் கமழும் பொழில்’’      (தேவா. 884 8).

கருக்கு - கருக்கல் = 1. காரிருள். 2. மங்கிருட்டு, விடியற் கருக்கல். 3. வானத்தில் முகில் படிதல். வானம் கருக்கலிட்டிருக்கின்றது என்பது உலக வழக்கு. கருக்கல் -ம. கருக்கல்.

கரு - கருப்பு = கருமை, இருள், இருண்டு தோன்றும் பேய், இருட்காலம் போன்றபஞ்சம்.

கருப்பு - தெ. கருவு.

கருப்பு - கருப்பை = 1. காரெலி, எலி. “அணிலொடு கருப்பை யாடாது’’ (பெரும்பாண். 85). 2. கருங்காய்ப் பனை (யா.)

கரு - கரும்பு = முதிர்ச்சியால் இருண்ட செங்கரும்பு, நாணற் கரும்பு, வேழக்கரும்பு, வரிக்கரும்பு (இராமக் கரும்பு) என்னும் வழக்குகளில், கரும்பு என்பது பொதுப்பெயர்.

கரும்பு - து. கரும்பு, ம. கரிம்பு, . kabbu.

கரு - கருள் = 1. கறுப்பு. “கருடரு கண்டத்து.... . கைலையார்’’ (தேவா. 337 4). 2. இருள் (பிங்.), 3. குற்றம். “கருடீர் வலியால்’’ (சேதுபு. முத்தீர்த். 5). கருள் - க்ருஷ் (வ.).

கர் - கறு. கறுத்தல் = கருநிறமாதல். கறுகறுத்தல் = 1. மிகக் கருத்தல், 2. மிகச் சினத்தல்.

கறுகுறு - ம. கறுகறு.

கறு - கறுப்பு = 1. கருமை (பிங்.). 2. கறுப்புப் புள்ளி. 3. கறை. 4. தழும்பு. “கைத்தலத் துணை கறுப்புற’’ (உபதேச. சிவபுண்ய. 315). 5. குற்றம். “உள்ளக்கறுப்பினை யறுத்து’’ (சிவதரு. சிவதரும. 25).