பக்கம் எண் :

5

அங்காளம்மை - தெ. அங்காளம்ம.

காளம் - காளகம் = கருமை. “காளக வுடையினள்’’ (சீவக. 320). காளகம்- வ. காலக்க.

காளி - காளிமை = கறுப்பு. “காளிமைப் பிழம்பு போத’’ (கம்பரா. உயுத். நாகபா. 217).

காளிமை - வ. காலிமா.

காளிமை - காளிமம் = கறுப்பு. “தனது காளிமங் கழிப்ப. ’’ (கந்தபு. திருநகரப். 72). காளிமம் = வ. காலிமன்.

காளி - காளிகம் = கரிய மணித்தக்காளி (மலை.).

காளிகம் - காளிக்கம் = கருஞ்சாயம் (யாழ். அக.). காளிக்கம் - வ. காலிக்க.

காள் - காழ் = 1. கருமை. “கதுப்பு விரித்தன்ன காழக நுணங்கறல். ’’ (சிறுபாண். 6). 2. கரிய மரமாகிய இரும்பிலி (மலை.). 3. குற்றம். “எக்காழு மிகந்துலஇன்பமுற’’ (காஞ்சிப்பு. கழுவாய். 300).

காழ் - காழகம் = கருமை.

“காழக மூட்டப்பட்ட’’          (சீவக. 1230).

கள் - (கர்) - கர - கரந்தை = நீல நிறமுள்ள பூவகை, அதையுடைய பூடு.

(கர்) - கரம் - கரம்பு = கரிசல் நிலம்.

கரம்பு - கரம்பை = 1. கரிய பழமுள்ள சிறுகளா (மலை.). 2. வறண்ட களிமண். 3. கரிசல் நிலம். “இருநிலக் கரம்பைப் படுநீ றாடி’’ (பெரும்பாண். 93). 4. பயிரிடாத கரிசல் நிலம். “விடுநிலக் கரம்பை விடரளை நிறைய. ’’ (பதிற். 28). 5. வண்டற் களிமண்ணிலம்.

கர் - கரி = 1. கரிந்தது. 2. அடுப்புக்கரி. 3. யானை. 4. கண்ணிலிடுமை. “கரிபோக் கினாரே’’ (சீவக. 626). 5. மரவைரம்.

கரி - கரியன் = கரிய திருமால்.

கரி - தெ., ., ., து. கரி.

கரி - கரிது - கரிசு = 1. கருமையானது. 2. குற்றம்.

“வினைகரி சறுமே’’ (தேவா. 129 1). 3. தீவினை (பாவம்).

“கரிசினை மாற்றி’’ (சைவச. பொது. 568).

கரிதல் = 1. கருமையாதல். “கரிந்த நீள்கயல்’’ (திருவிளை. விருத்தகு. 20.). 2. கரியாதல். “கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை’’ (அகம். 75). 3. தீய்தல். “காயெரிக் கரியக் கரிய” (கம்பரா. மிதிலை. 81).