கார் - ம., து, க. கார், தெ. காரு. கார் - காரி = 1. கருமை (பிங்.). 2. கருநிறமுடையது (திவா.). 3. காக்கை (திவா.). 4. கரிக்குருவி. “கட்சியுட் காரி கலுழ்ம். ’’ (பு. வெ. 1 3). 5. கரிய எருது. “சுரிநெற்றிக் காரி’’ (கலித். 101 21). 6. காரீயம் (சங். அக.). 7. வாசுதேவன், “செங்கட் காரி’’ (பரிபா. 3 81). 8. வேந்தன் (தேவர்கோன்). 9. கருங்கோள் (சனி). “காரி வாரத்தில்’’ ‘குற்றா. தல. மூர்த்தி. 30). கள் - (கண்) - (கண்கு) - கங்கு = கருந்தினை (பிங்.). கங்கு - வ. கங்கு. கங்கு - கங்குல் = கரிய இரவு. “கங்குலும் பகலுங் கண்டுயி லறியாள்’’ (திவ். திருவாய். 7 12 1). கள் - (கய்) - கயம் = கரிக்குருவி. “கோக்கயம்’’ (திருவாலவா. 60 13) கயம் - கயவு = கருக்குருவி (பிங்.). கயம் - கசம். காரிருளை இருட்டுக்கசம் என்பது நெல்லை வழக்கு. காள் - காய் = காயம் = 1. கரிய வானம். “விண்ணென வரூஉங் காயப்பெயர்’’ (தொல். எழுத்து. 305) காயம் - காசம் = வானம். “காச மாயின வெல்லாங் கரந்து’’ (கம்பரா. மருத்து. 40) காசம் - ஆகாச (வ.) 2. கரிய மலர்வகை. “காய மலர் நிறவா’’ (திவ். பெரியாழ். 1 5 6) காய் - காயா. காயாம்பூ = காயமலர். “காயாம்பூ வண்ணனிவை கழறு மன்றே’’ (கூர்மபு. இராமனவதா. 1). காயா - காசா = 1. காயாம்பூ. “காசா கடன்மழை யனையானை’’ (கம்பரா. கங்கை. 53). 2. எருமை (பிங்.). காய் - காயல் = 1. கரிய உப்பங்கழி (சூடா.). கழிமுகம் (பிங்.), 2. பொருநை (தாம்பிரபரணி) முகத்திலுள்ள ஓர் ஊர். “தென்காயற் பதியானே’’ (தனிப்பாடல்). காயல் - ம. காயல். |