பக்கம் எண் :

107

புடல் - புடலை = புடலங்காய்.

புடலை - தெ. பொட்ல, க. படல.

புடலங்காய் - வ. பட்டோலிக்கா.

பட்டோலிக்கா என்னும் வடசொல் தமிழிற் புடல் என்று திரிந்துள்ளதாக, சென்னைப் ப.க.க. தமிழ் அகரமுதலி துணிச்சலுடன் குறிக்கின்றது. பகுத்தறிவுள்ளவர் உண்மை கண்டுகொள்க.

புள் - புளு - புடு - புடி. புடித்தல் = பொய் சொல்லுதல். பொய்புடிக்கிறான் (சேலம் வழக்கு). இது பொய்புளுகுகிறான் என்பது போன்ற மிகைபடக் கூறல்.

புடி - பிடி - பிசி. ஒ.நோ.: ஒடி - ஒசி. பிசி = 1. பொய். 2. உவமக் கூற்று வாயிலாக உண்மை நிகழ்ச்சியை அறிவித்தல். 3. விடுகதை.

“பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு”    (மணிமே. 22 62).

“ஒப்பொடு புணர்ந்த உவமத் தானும்
தோன்றுவது கிளந்த துணிவி னானும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”    (தொல். செய். 174)

புடி - புசி. . புசி.

புளு - புளுகு. புளுகுதல் = பொய் சொல்லுதல். புளுகு = பொய். புளுகுணி = வழக்கமாய்ப் பொய் சொல்பவன்.

புளுகு - . பல்கு (phalgu).

புல் - புற்று. ஒ.நோ.: சுல் (சுலவு) - சுற்று. புற்று = 1. உட்டுளையுள்ள கறையான் மண்கூடு. “புற்றிடை வெகுளி நாகம்” (சீவக. 1285). கறையான் புற்றிற் பாம்பு குடிகொண்டது போல (உ.வ.). 2. எறும்பு வளை. 3. புரை வைத்த புண். “புழுச்செறி... புற்றுறு நோய்” (கடம்பபு. இலீலா. 116).

தெ. புட்ட, ., . புத்து.

புற்று - புற்றம். “நெடுஞ்செம் புற்றம் ஈயல் பகர” (ஐங். 497).

புற்றளை = புற்றுவளை. “நாகம் கிடந்த ..... புற்றளை” (மணிமே. 20 99).

புற்றுத்தேன் = மதிலிடுக்கில் ஈக்களால் வைக்கப்பட்ட தேன்.

புற்றுவெடிப்பு = பாதத்தில் தோன்றும் பித்த வெடிப்பு.