பக்கம் எண் :

111

பெள் - பேள் - பேழ் = 1. அகலம். 2. பெருமை (பிங்.).

பேழ்வாய் = பெரிய வாய். “பிறழ்பற் பேழ்வாய்..... பேய் மகள்” (திருமுருகு. 47).

பேழ் - பேழை = 1. பெருமை. “பேழை வார்சடை” (தேவா. 853 6). 2. பெட்டி. 3. கூடை. 4. சிறு படகு.

பிள் - பிடு. பிடுதல் = இரண்டாக அல்லது துண்டு துண்டாகப் பிளத்தல்.

பிடு - பிடுகு = வானம் வெடிப்பது போன்ற இடி. “பெரும் பிடுகு” (S.I.I. II, 341).

தெ., . பிடுகு (g).

பிடுகு - பிடுங்கு. பிடுங்குதல் = (செ. கு. வி.) 1. உடைதல். வெள்ளத்தால் குளக்கரை நடுவிற் பிடுங்கிவிட்டது (உ.வ.). 2. அடைப்பு விலகுதல். தண்ணீர்த் தொட்டியில் அடைப்புப் பிடுங்கி விட்டது (உ.வ.). 3. வெடித்தல். குழியில் அல்லது குழாயில் வெடிமருந்து பிடுங்கிவிட்டது (உ.வ.). 4. வெளிப்படுதல். வெளிக்குப் போகாது நீண்ட நேரம் அடக்கி வைத்ததனால் பிடுங்கிவிட்டது (உ.வ.).

(செ. குன்றாவி.) 1. பறித்தல். கீரை பிடுங்குதல் (உ.வ.). 2. வலிந்து கவர்தல். அவன் கையிலிருந்த பணப்பையைப் பிடுங்கிக் கொண்டான் (உ.வ.). 3. பெயர்த்தல் ஆறு அணையைப் பிடுங்கிக் கொண்டு போகிறது. யானை மரத்தை வேரோடு பிடுங்கிவிட்டது (உ.வ.). “பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி” (தனிப்பா.). 4. கொத்தித் தின்னுதல். பிணம் பிடுங்கிக் கழுகு (உ.வ.) 5. கடித்தல். அந்தக் குளத்திற் குளித்தால் மீன் பிடுங்கிவிடும். 6. இழுத்தல் அல்லது பிய்த்தல். உடும்புக் கறி தின்றவன் வாயாலெடுத்தால் உட்சதையைப் பிடுங்கிக்கொண்டு வரும் (உ.வ.). 7. பசி வாட்டுதல். பசி வந்து பிய்த்துப் பிடுங்குகிறது (உ.வ.). 8. தொந்தரவு செய்தல். வீட்டிற்குப் போனால் மனைவி மக்கள் பிடுங்கல் வெளியே வந்தாற் கடன்காரன் பிடுங்கல் (உ. வ.).

. பிடுங்ஙுக.

பிடு - பிடுகு - பிடுங்கு = ஒ.நோ.: OE. brecan, OS. brekan, OHG. brethan, Goth. brikan, E. break, L. frag, frang, fract.

பிடுங்கு - பிடாங்கு = குழாய் வெடி (வேட்டு).

பிடு - பிது - பிதிர். பிதிர்தல் = 1. சிறுசிறு துணிக்கையாகப் பிரிதல். 2. பழந்துணி சிதைந்து கிழிதல். 3. நொறுங்கல். “பிதிர்ந்து