பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

போயின பிறங்கல்க ளேழும்” (கந்தபு. யுத்தகாண். முதனாட். 50). 4. சிதறுதல். “பிதிர்ந்தெழுந் தார்த்த பொடிக்குழீஇ” (கம்பரா. பிரமாத். 100). 5. பரத்தல். “பிதிரொளித் தவிசின்” (தணிகைப்பு. வீராட் 78). 6. மனமயங்குதல். “பிதிரு மனமிலேன்” (திங். இயற். நான்மு. 84).

பிதிர் = 1. பூஞ்சுண்ணம் (பிங்.). 2. பொடி (பிங்.). 3. திவலை (பிங் 4. துண்டம். “மதிப்பிதிர்க் கண்ணியீர்” (தேவா. 599 4). 5. தீப்பொறி. “கொல்ல னெறிபொற் பிதிரின்” (நற். 13). 6. சேறு. “மருப்பிற் பிதிர்பட வுழக்கி” (கல்லா. 62 10). 7. கால நுட்பம் (பிங்.). 8. கைந்நொடி (W.). 9. விடுகதை. “கதைகளும் பிதிர்களு மொழிவார்” (கம்பரா. ஊர்தேடு. 139). 10. வியப்புச் செயல். “பின்னால் தான் செய்யும் பிதிர்” (திவ். இயற். நான்மு. 83).

பிதிர் - புதிர் = விடுகதை.

பிது - பிது - பிதுங்கு. பிதுங்குதல் = 1. உள்ளீடு வெளிப்படுதல். “கதிர்முடியுங் கண்ணும் பிதுங்க வூன்றி” (தேவா. 56 10). 2. சுவரிற் செங்கல் வெளி நீண்டிருத்தல். 2. கண் பிதுங்குதல். வேலைக் கடுமையாற் கண் பிதுங்கினாற் போல் வருத்த மிகுதல்.

பிதுங்கு - பிதுக்கு. பிதுக்குதல் = 1. உள்ளீட்டை வெளிப்படுத்துதல். “பீட்பிதுக்கி” (நாலடி. 20). 2. ஊறின மொச்சைப் பயற்றை விரலால் அமுக்கி அதன் பருப்பை வெளிப்படுத்துதல். பிதுக்குப் பருப்பு (உ. வ.).

. ஹுதுக்கு.

பிது - பிசு - பிசிர். பிசிர்தல் = துளியாகச் சிதறுதல். “வல்வில் பிசிர” (பதிற். 50 6). 2. பிசுக்குக் கேட்டல்.

பிசிர் = 1. நீர்த்துளி. “வான்பிசிர்க் கருவியின்” (ஐங். 461). 2. ஊற்றுநீர். “மலிரும் பிசிர்போல” (பரிபா. 6 83). 3. குருத்து. “பிசிரொடு சுடுகிழங்கு நுகர” (புறம். 225). 4. ஆடையிலெழுஞ் சிம்பு.

பிசு - பிசுகு. பிசுகுதல் = 1. கடையிற் பண்டம் வாங்கிய பின் மேலும் ஒரு சிறிது விலையின்றிக் கேட்டல். 2. கஞ்சத்தனம் பண்ணுதல். அவன் கால் துட்டுக்குப் பிசுகுகிறான் (உ.வ.).

பிசுகு - பிசுக்கு = 1. சிறு துணிக்கை, சிற்றளவுப் பொருள். 2. பண்டம் விலைக்கு வாங்கிய பின் மேலும் விலையின்றிக் கேட்கும் சிற்றளவுப் பொருள். ஒரு பிசுக்குப் போடு (உ. வ.).

பிசுக்கு - பிசுக்கன் = புல்லன், சிறுமகன்.

பிசுக்கர் = புல்லர். “பேதவாதப் பிசுக்கரை” (திருவிசைப். திருமாளி. 4 5).