தோன்றி” (திருவாலவா. 35 1). 4. கூத்துப் பயிற்றுவோன், ஆடலாசிரியன். 5. தலைமைக் கொற்றன் (W.). 6. யானைப்பாகன் (W.). 7. நஞ்சு மருத்துவன். கையைக் குறிக்கும் பாணி என்னுஞ் சொல் வடமொழியிற் சிறப்பாக வழங்கினும், அதற்கு மூலமாகக் காட்டப்படும் பண் என்னுஞ் சொல்லிற்கு, பண்டமாற்றுதல், பணையம் வைத்தல், பேரம் பேசுதல் என்னும் பொருள்களே உள. அவை பொருந்துவனவல்ல. எந்தப் பொருளையும் தொழிலையுஞ் செய்தற்குக் கை இன்றியமையாத உறுப்பாதலால், செய்தலைக் குறிக்கும் சொல்லினின்று கைப்பெயர் அமைவதே இயற்கைக்குப் பொருத்தமாம். பண் (பண்ணு) - பாண் - பாணி (=பண்ணி). தண்டபாணி = தண்டம் (தண்டு + அம்) ஏந்திய கையன், முருகன். தண்டம் என்னும் சொல்லும் தவறாக வடசொல்லெனக் கருதப்படுகின்றது. ஒ.நோ.: செய் - தெ. சேயி (c), க. கெய். கெய்யி, த. கை. செய் - கெய் - கை. கை யென்னும் பெயர், செய் என்னும் வடிவில் குமரிநாட்டில் வழங்கியிருத்தல் வேண்டும். கரு - வக்ரு - கர = கை. கருத்தல் செய்தல். இவ் வினைச்சொல் கடைக்கழகக் காலத்திற்கு முன்பே வழக்கற்றுப் போயிற்று. கருமம், கருவி, கரணம் முதலிய சொற்களை நோக்குக. பண்ணுதல் என்னுஞ் சொல், அலகு, பண் என்னும் இரு வகையில் இசையமைத்தலைக் குறிக்க ஆளப்பட்டதனால், பண் என்னுஞ் சொல் இசை வகையையுங் குறித்தது. பண்ணலாவது : “வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல் விலக்கின் றிளிவழி கேட்டும் இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது விளைப்பரு மரபிற் பண்ண லாகும் (சிலப். 7 க, பழங்குறிப்புரை). “பண்ணல் - பாட நினைந்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந் தன்மை மாத்திரையறிந்து வீக்குதல்” (சீவக. 657, நச். உரை). ஒ.நோ.: செய் - செய்யுள். “வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” (நன். 268). |