பொக்கணி - மொக்கணி = குதிரைக்குக் கொள் கோதுமை முதலிய உணவு கட்டும் பை. க. பக்கண (b). பொக்கு - பொக்கணை = 1.கல் மரம் முதலியவற்றிலுள்ள பொந்து. 2. நெற்குத்தும் உரல். பொகு - பகு. கால்டுவெலார் தம் திரவிட ஒப்பியல் இலக்கணத்தின் இறுதிப் பகுதியில், “சொல்லியல் உறவுகள்” (Glossarial Affinities) என்னும் தலைப்பின் கீழ், ‘‘bhaj, to share. bhajga, a portion. I am doubtful whether to regard these words as derived from the Tamil pag-u, to divide, to share, or to suppose both the Sanskrit and the Tamil to be derived from a common and earlier source. Probably the former supposition is in this case the more correct. At all events the Tamil-Malayalam pag-u is a pase, underived Drvidian root. A noun former from it, signifying a share, is pang-u (ng for g, as is after the case); and a collateral root is pag-ir, meaning also to share. The Sanskrit word pangu means lame, and is altogether unconnected with the Tamil one. Other derived nouns are pagal, a division daylight; pal (=pagal), a portion; and padi (pagndi). half’’ - (Dravidian Conparative Grammar, p. 573). என்று கூறியிருத்தல் காண்க. பகுதல் = (செ.கு.வி.) 1. பிளவுபடுதல். “சக்கரவாளச் சிலைபக” (திருப்பு. 841). 2. பிரிவுபடுதல். “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்” (குறள். 187). (செ. குன்றாவி.). பாகம் பிரித்தல் “பகுந்துனக்கு வைத்தகோ லறைக்கு” (திருவாலவா. 30 50). ம. பகுக, தெ. பகுலு (g). பகுத்தல் = 1. பங்கிடுதல். “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல்” (குறள். 322). 2. வகைப்படுத்துதல் (W.). 3. வகுத்துத் தெளிவாய்க் கூறுதல் (W.). 4. வகுத்து கொடுத்தல் (பிங்.). 5. வெட்டுதல் (பிங்.). 6. பிடுங்குதல் “பாதவ மொன்று பகுத்தான்” (கம்பரா. இலங்கையெரி. 55). 7. பகுத்து நீக்குதல். “பண்ணுறு சுளைகள் கையாற் பகுத்துணக் கொடுத்த தன்றே” (சீவக. 2724). பகு - வகு. வகுதல் = பிளத்தல். “மரல் வகுந்து கொடுத்த செம்பூங் கண்ணியொடு” (புறம். 264). |