பக்கம் எண் :

133

8. பொலிவு. 9. அழகு. 10. செய்யுளிசை யொழுக்கு. “மங்கல வள்ளை வகுப்பொடு” (வச்சணந். செய்யு. 32).

பகு - பகுதி = 1. பகுப்பு. “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” (திருவாச. 3 1). 2. கூறு. 3. நூற்பிரிவு அல்லது இதழ்ப் பிரிவு. 4. வேறுபாடு. “மயங்கிய தகுதி அல்லது பகுதியின் றெனின்” (ஞானா. 35 5). 5. திறை. “இது பகுதி கொள்கெனா” (அரிச். பு. நகர்நீ. 111). 6. வருவாய் (சூடா.). 7. வரி. 8. பாதி.

பகுதி (திறை) - தெ. பகிதி (g), . பகதி (g).

பகுதி - பாதி = 1. சரிசமமாகப் பகுக்கப்பட்ட பொருட் பகுதி யிரண்டுள் ஒன்று. “பாதிப் பெண்ணொரு பாகத்தன்” (தேவா. 479 3).

2. அரைப் பகுதியளவான நடு. “பாதி வழியின் மிண்டி” (காஞ்சிப்பு. சிவாத். 28).

வகு - வகுதி = வகுப்பு. “வகுதியின் வசத்தன” (கம்பரா. இரணியன். 69).

பகு - பகம் = பிளவு.

பகு - பகவு = 1. பிளவு. 2. வெடிப்பு (யாழ். அக.). 3. பங்கு (யாழ். அக.). 4. துண்டு, துணிக்கை. “எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்” (குறள். 889). 5. பகுப்பு.

பகவு - பகவன் = எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிக்கும் இறைவன். 2. சிவன் (திவா.). 3. திருமால் (பிங்.). 4. தெய்வமாக வணங்கப்படும் கதிரவன் (பிங்.). 5. ஆரியத் தெய்வமாகிய பிரமன் (பிங்.). 6. சமணர்க்குத் தேவன் போன்ற அருகன் (திவா.). 7. புத்த நெறியார்க்குத் தேவன் போன்ற புத்தன் (திவா.). 8. இறைவனிடத்திற்கு வழிகாட்டும் மதக்குரு (பிங்.). 9. இறைவனடியாரும் முற்றத் துறந்த முழு முனிவரும். “பத்தர்களும் பகவர்களும்” (திவ். பெரியாழ். 4 9 6).

திருக்கோவில்களிலும் மடங்களிலும் பண்ணையாரிடத்தும் வேலை செய்வார்க்கெல்லாம், சம்பளமாக நெல்லை அளந்து கொடுப்பதே பண்டை நாள் வழக்கம். அது படியளத்தல் என்று சொல்லப்படும். அதனால், வேலையிலமர்த்தி வாழ்க்கைக்கு வேண்டும் சம்பளம் கொடுப்பார்க்கெல்லாம், படியளப்பார் என்னும் பெயர் உண்டாயிற்று. எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப்பவன் என்னுங் கருத்தில் இறைவனும் படியளப்பான் எனப்பட்டான். “நமக்குப் படியளப்பார் நாரியோர் பாகர்” (தனிப்பா. I, 121 : 5).

எல்லாம்வல்ல ஒரு தனி இறைவனுக்குரிய பகவன் என்னும் பெயர், சிறுதெய்வங்கட்கும் சிறந்த மக்கட்கும் நாளடைவில் வழங்கத்