தலைப்பட்டுவிட்டதனால், திருவள்ளுவர் தம் திருக்குறட் கடவுள் வாழ்த்தில், முழுமுதற்கடவுளைக் குறிக்க ஆதிபகவன் என்று அடை கொடுத்துக் கூற வேண்டியதாயிற்று. ஆதி என்பது முதல் என்று பொருள்படும் வடநாட்டுச் சொல். அது முந்து திரவிடமாகிய பிராகிருதச் சொல்லாயிருக்கலாம். ஆதிபகவன் என்றது, ஆதியென்னும் புலைச்சியை மணந்த ஒரு பிராமணனை எனின், ஆதி சங்கராச் சாரியார் என்பதும் ஆதியென்னும் புலைச்சியை மணந்த சங்கராச்சாரி யாரை என்று கூறல் வேண்டும். அது பொருளன்மை அறிக. கார்காலம், முரசுகட்டில், கோவூர்கிழார் என்பன போல, ஆதிபகவன் என்பதும் வலிமிகாது வழங்கிய ஒருசில புணர்ச் சொற்களுள் ஒன்றாகும். அதனால், ஆதி யென்பது வடசொல் (சமற்கிருதச் சொல்) என்று கொள்ள வேண்டுவதில்லை. மேலை யாரிய மொழிகளுள் ஒன்றிலும் ஆதி என்னுஞ் சொல்லின்மையின், அது வடசொல்லாகாது. வழக்கற்றுப் போன கீழையாரியமும் பிராகிருதமுங் கலந்ததே வேதமொழி என்றும், வேதமொழியுந் தமிழுங் கலந்ததே சமற்கிருதம் என்றும், அவ் விரண்டுந் தேவமொழி யென்னும் ஏமாற்று இக் காலத்துச் செல்லாதென்றும், தமிழர் உண்மை அறிந்து தெளிக. பகவன் - வ. பகவான் (bhagavan). பகு - பகல் = 1. பகுக்கை (பிங்.). “நெருநைப் பகலிடங் கண்ணி” (புறம். 249). 2. (ஒரு பொருள் இரு சமப்பாகமாகப் பகும்) நடு (திவா.). 3. நடுவுநிலைமை. “அகல்வையத்துப் பகலாற்றி” (பதிற். 90 9). 4. நடு நுகத்தாணி. “நெடுநுகத்துப் பகல்போல” (பட்டினப். 206). 5. இருநாழிகை கொண்ட முழுத்தம் (முகூர்த்தம்). “ஒரு பகல்காறு நின்றான்” (சீவக. 2200). 6. நண்பகல், உச்சிவேளை. 7. நள்ளிருள். “யாமத்தும் பகலுந் துஞ்சார்” (சிலப். 81). 8. காலை முதல் மாலை வரையுள்ள காலம். “பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே” (புறம். 8) 9. அறுபது நாழிகை கொண்ட நாள். “ஒல்வ கொடாது தொழிந்த பகலும்” (நாலடி. 169). 10. கதிரவன். “பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல்” (மணிமே. 4 92). 11. ஒளி விளக்கம் (திவா.). பகல் - பகர். பகர்தல் = ஒளிவிடுதல். “பக்கங் கருஞ்சிறுப் பாறை மீதே யருவிகள் பகர்ந்தனைய (திவ். பெரியாழ். 1 பகர் = ஒளி. “சிந்தாமணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங்கடத் தானே” (திவ். திருவாய். 6 9). |