பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

பகை = 1. வெறுப்பு. 2. எதிர்ப்பு “பகையென்னும் பண்பி லதனை” (குறள். 871). 3. பகைவன். “உறுபகை யூக்க மழிப்ப தரண்” (குறள். 744). 4. மாறு, மாறுபாடு. “நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்” (ஐங். 187). 5. தீங்கு. “எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை” (குறள். 1225). 6. இசைமுரண், யாழில் நின்ற நரம்பிற்கு மூன்றாவதாயும் ஆறாவதாயுமுள்ள பகை நரம்பு. “வெம்பகை நரம்பி னென்கைச் செலுத்தியது” (மணிமே. 4 70). 7. கொல்லும் உயிரி பாம்பிற்குக் கீரி பகை (உ.வ.). 8. நோய் மருந்து. பித்தத்திற்குப் பகை இஞ்சி (உ.வ.). 9. காமம், சினம் முதலிய ஆறு அகப்பகைக் குணம்.

. பக, தெ., . பக (g).

பகு - பாகு = 1. பகுதி (W.). 2. பாகம். 3. பக்கம். 4. இரப்போர்க்கிடும் பகுதியாகிய ஐயம் (பிச்சை). “பாகிடுவான் சென் றேனைப் பற்றி நோக்கி” (தேவா. 54 4). 5. சிவன்பாகமாகிய சிவை (அக. நி.). 6. குளக்கரை (அக.நி.). 7. அழகு. “பாகா ரிஞ்சிப் பொன்மதில்” (கம்பரா. ஊர்தே. 82). 8. தோள்.

பாகு - வாகு = 1. பக்கம். 2. தோள் (பிங்.). “வாகுப் பிறங்கல்” (இரகு. கடிம. 64). 3. ஒழுங்கு. “வாகா நியாய வட்டி வாங்காமல்” (பணவிடு. 238). 4. அழகு (சூடா.). “வாகா ரிபமினாள்” (திருப்பு. 238). 5. ஒளி. “இந்து வாகை” (திருப்பு. 399). 6. திறமை. “வாகு பெறுதேர் வலவனை” (கந்தபு. மூன்றாம். யுத். 70). 7. தொட்டால் வாடி (அரு. அக.).

. வாகு, தெ. பாகு (bhagu), து. வாக (g).

வாகுபுரி = தோள்வளை.

“வாகுபுரி வயங்க” (காதை.)

வாகுவளையம் - வ. பாகுவலய (b).

பாகு - பாகம் = 1. பகுக்கை (சூடா.). 2. பக்கம். “பாகம் பெண்ணோ டாயின பரிசும்” (திருவாச. 2 78). 3. கூறு. “தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப் பன்று” (திருவாச. 5 4. பாதி (சூடா.). 5. பாகை. 6. ஐயம் (பிச்சை). 7. பங்கம். “பாகத்தைப் படாத நெஞ்சின்” (சீவக. 2278, உரை). 8. பறைவகை (சிலப். 3 27, உரை).

பாகம் - . பாக (bhaga).

பாகு - பாகி. பாகித்தல் = பங்கிடுதல்.

திரிபாகி (முப்பாகி) = மூவெழுத்துகள் கொண்ட ஒரு சொல், அதன் முதலெழுத்தையும் இறுதி யெழுத்தையுஞ் சேர்க்க மற்றொரு சொல்லாகியும், இடையெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்க