அலசுதல் = இழையகலுதல். அலசல் = இழையகன்ற துணி. அலர்தல் = மலர்தல். அலவை = பரத்தைமை. கலத்தல் = பரத்தல். கலக்க நடுதல் என்னும் வழக்கைக் காண்க. “கட்டுரை கலந்த காலை” (கம்பரா. கர. 68) கல - கலவு - கலவம் - கலாவம் = அரைப்பட்டிகை, மயிற்பீலி. கலை = ஆடை. சல்லா = அலசல் துணி, சல்லாரி = அலசற் சீலை. சல்லவட்டம் = கேடகவகை. துவைத்தல் = குற்றுதல். துகில் = துணி. துகிலிகை = துணிக் கொடி. தகழி = அகல். தகண் = புற்பற்றை. தகண் - தகடு. (துட்டு) - தட்டு - தட்டம் - தடம் = அகலம், பெருமை, அகன்ற குளம். தடம் - தடாகம். தளம் = தட்டு, பரப்பு, படை இதழ். தாளம் = சாலர். தாலம் = தட்டு, யானைக்காது. நல் - (நால்) - நாலம் - ஞாலம் = பரந்த உலகம். பருமையும் அகலமும் ஒன்றே. பெரிய இலை, பெரிய தாள், பெரிய தட்டு, பெரிய துணி, பெருவழி என்று அகன்ற பொருள்களைக் கூறுதல் காண்க. நனம் = அகலம். நனம் - நனவு = அகலம். மலர்தல் = விரிதல். இங்குக் காட்டப்பட்ட சொற்கள் பலவற்றிற்கு நேர் மூலம் அகரமுதலாயினும், அடிமூலம் உகரமுதல என்பது ஒருதலை. இது இப் படலம் முழுமைக்கும் ஒக்கும். xxii. அமுங்குதல் அமுங்குதலாவது ஒரு பொருள் அழுந்த முட்டுதல். உறு - உறுத்து. (உள்) - (அள்) - அழு - அழுந்து - அழுத்து - அழுத்தம். (உம்) - அம் - அமுங்கு - அமுக்கு - அமுக்கம். (நும்) - நெம் - (நெமுங்கு) - நெமுங்குதல் = அமுங்குதல். (நுள்) - (நெள்) - நெரு - நெருங்கு - நெருக்கு - நெருக்கம். |