பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

புள் - புள்ளி = குத்து, மெய்யெழுத்து.

புகு-புகர் = புள்ளி. புகர்-போர் = புள்ளி.

புட்டு-புட்டா = புள்ளி.

புள்-பொள்-பொறி = புள்ளி.

புட்டு-பொட்டு = புள்ளி.

புள்ளுதல் புட்டுதல் பொள்ளுதல் பொட்டுதல் முதலிய வினைகள் வழக்கற்றன.

ix. நுண்மை

கூரிய முனை நுட்பமாயிருத்தலால், கூர்மை நுண்மையைக் குறிக்கும்.

உள்-அள்-அரு-அரி = நுண்மை.

அள்-(அய்)-ஐ = நுண்மை.

“அரியே ஐம்மை”                                          (தொல். உரி. 58)

துள்-துய் = பஞ்சின் நுனி.

நுள்-நுண்-நுண்மை.

நுள்-நொள்-நொய்-நொய்ம்மை = நுண்மை.

நொய் = நுண்மை.

முள்-முளரி = நுண்மை.

x. நுண்வினைகள்

நுண்மைபற்றி நுள் (நுல்) என்னும் அடியினின்று பிறந்த வினைச்சொற்கள் வருமாறு:

நுல்-(நுற்பு)-நொற்பு-நொற்பம் = நுட்பம்.

நுள்-நுழ-நுழை. (1) நுழைதல் = நுண்மையாதல்,

“நுழைநூற் கலிங்கம்”                                         (மலைபடு. 561)

(2) கூரிதாதல்.

“நுழைந்த நோக்கிற் கண்ணுள் வினைஞரும்”               (மதுரைக். 517)

நுழை = நுண்மை. நுழைபுலம் - நுண்ணிய அறிவு.

நுழ-நிழ. நிழத்தல் = நுணுகுதல்.

நுனி = நுண்மை. நுனித்தல் = கூராக்குதல், கூர்ந்து நோக்குதல்.