பக்கம் எண் :

139

நில் - நிழ - நிழல் = ஒளி. நிழல் - நிகர் = ஒளி.

நிழல் - நிழறு - நிழற்று.

புல் - (பூல்) - பூ = பொலிவு, அழகு, மலர். பூத்தல் = பொலிதல், அழகாதல், பூ மலர்தல்.

புள் - பள் - பள - பளபளப்பு. பள் - (பாள்) - பாளம் = பளபளப்பு. பாள் - வாள் = ஒளி.

“வாள்ஒளி யாகும்”                                           (தொல். உரி. 69)

பள் - பட்டு - பட்டம். பட்டுப்பட்டென்று நிலா அடிக்கிறது. பட்டப்பகல் என்னும் வழக்குகளை நோக்குக.

பள் - பளீர் (ஒளிர்தற் குறிப்பு). பள் - பளிச்சு (ஒ.கு.).

பள் - பளிங்கு = கண்ணாடி, வெள்ளி (Venus).

பட்டு = பொலிவுற்ற துணி.

புல் - பொல் - பொலி - பொலிவு. பொல் - பொற்பு. பொல்லுதல் = பொலிதல்.

பொல் - பொலம் - பொலன். பொல் - பொன் = பொலிவு, அழகு, பொலியும் தங்கம்.

பொல் - பொற்றி - பொறி = அழகு. பொற்ற = அழகிய, நல்ல.

“பொற்ற தாமரையிற் போந்து”                                (சீவக. 2608)

பொல்லாத - பொல்லா = அழகற்ற, தீய.

“பொல்லாச் சிறகைவிரித்து”                                  (மூதுரை. 14)

பொல்லாப்பு = தீமை, பொல்லாங்கு = தீமை. பொல்லார் = தீயவர். நல்லது பொல்லது, நலம் பொலம் முதலிய இணைமொழிகளில் பின்மொழி எதுகை நோக்கித் திரிந்ததாகும்.

முல் - (மில்) - மின் - மின்னல். மின் - மீன் = மீனம்.

(மில்) - வில் = ஒளி.

முள் - (மள்) - மழ - மழமழப்பு. மழ - மாழை = பொன்.

மாழை - மாடை - மாசை = பொற்காசு.

மள் - மண் - மணி = விளங்கும் கல். மண்ணுதல் = அலங்கரித்தல்.

முள் - (மிள்) - மிளிர். முள் - மெள் - மெரு - மெருகு = பளபளப்பு.